Web Ads

வீடியோ காலில் வந்த ரோகினி, அண்ணாமலைக்கு வந்து சந்தேகம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினி வீடியோ கால் பண்ண அண்ணாமலைக்கு சந்தேகம் வந்துள்ளது.

SiragadikkaAasai Serial Today Episode Update 22-02-25
SiragadikkaAasai Serial Today Episode Update 22-02-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் அருண் காய்கறி கடையில் காய் வாங்கிக் கொண்டிருக்க அங்கு வந்த முத்து கீரை இருக்கா என்று கேட்கிறார்.இல்ல என்று சொல்லி விட்டு சீக்கிரம் வரணும்பா என்று சொல்ல அருனிடம் வம்பு இழுக்க ஆரம்பிக்கிறார். கீரை சாப்பிட்டா நெறைய ஸ்ட்ரென்த்னு சொல்றாங்களே அப்படியே அண்ணன் என்று கடைக்காரரிடம் கேட்க ஆமா தம்பி நான் ரொம்ப நல்லது ஞாபக சக்திக்கு அதிகமா இருக்கும் என்று சொல்ல உடனே முத்து மறக்கிற மாதிரியான பண்ணி இருப்போம் என்று அருனிடம் வம்பு இழுக்கிறார். சாதாரண மனுஷனால ஒன்னும் பண்ண முடியாதுன்னு சொன்னாங்க இப்ப சட்டையை கழட்டி உட்கார வைத்துள்ள என்று பேச ஒரு கட்டத்திற்கு மேல் டென்ஷன் ஆனா அருண் முத்துவின் சட்டையை பிடித்து கடையிலிருந்து வெளியே வருகிறார். அனைவரும் கூட்டம் கூடி விட முத்து அவரை தள்ளிவிட அருண் விழப் போகும் நேரத்தில் முத்து பிடிக்க அருணின் சட்டையில் இருக்கும் ஜோபி கிழிந்து விடுகிறது.

இதனால் டென்ஷனான அருண் கோபமாக முறைத்து பார்க்க முத்து நீ கீழ விழக்கூடாதுன்னு தான் நான் புடிச்சேன் நீ சட்டையை பிடிக்காமல் இருந்தால் எதுவும் நடந்திருக்காது என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். மறுபக்கம் மீனா இட்லியும் வடகரியும் வைத்து சாப்பாடு பரிமாறிக் கொண்டிருக்க அண்ணாமலை இன்னொரு இட்லி கேட்கிறார் ஆனால் மீனா தயங்க ஏன் என வைக்க மாட்டேன் என்று முத்து கேட்க நான் மூணு இட்லி தான் சாப்பிடுவேன் ஆனா இப்போ எக்ஸ்ட்ரா ஒரு இட்லி கேட்பதினால் மீனா யோசிக்கிறா மீரா வெச்ச வடகறி குழம்பு ஓட டேஸ்ட்டா என்ன கேட்க வைக்குது என்று சொல்லி எடுத்து வைத்து சாப்பிட்டுக் கொண்டு இருக்க அந்த நேரம் பார்த்து விஜயா வருகிறார்.

நீங்க எதுக்கு நாலு இட்லி சாப்பிடுறீங்க என்று கேட்க முத்து ஏன் கம்மியா சாப்பிடுறீங்கன்னு தான் கேட்ட கேள்விப்பட்டிருக்க இவங்கன்னு இப்படி கேக்குறாங்க என்று சொல்ல உன் வயசுக்கு அப்படி கேட்கலாம் நான் என் வயசுக்கு அதிகமா சாப்பிடாதீங்கன்னு தான் கேட்கணும் ஏன்னா அதிகமா சாப்பிடக்கூடாது என்று சொல்லி என் மேல விஜய் அக்கறையா கேட்கிறார் என்று சொல்லுகிறார். உடனே வேற எதுவும் செய்யலையா என்ன மீனாவிடம் கேட்க மீனா செய்யவில்லை என்று சொல்லுகிறார். நான் உடம்பு குறைக்கணும், டயட் ஃபுட் சாப்பிட போறேன் என்று சொல்ல முத்து உடம்புல கொழுப்பு அதிகமாயிட்டு இருக்கும் என்று சொல்லுகிறார் உடனே மனோஜ் அம்மாவுக்கு கொழுப்புன்னு சொல்றியா என்று கேட்க, நான் அப்படி சொல்லல கொழுப்பு உடம்பு அதிகமா இருந்தாலும் குண்டா வாங்க என்று சொல்ல விஜயா கோபப்பட்டு நான் எனக்கு பிளாக் டீ போட்டுக்கிறேன் என்று சொல்லி கிச்சனுக்கு வருகிறார்.

அந்த நேரம் பார்த்து ரவியும் சுருதியும் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கின்றனர். கிச்சனுக்கு வந்த விஜயா வடகறி வாசத்தையும் இட்லியையும் பார்த்து இது எப்படி மிஸ் பண்ண முடியும் நம்ம எப்படியாவது சாப்பிடணும் என்று கிணத்தில் போட்டுக் கொண்டு திருட்டுத்தனமாக கிச்சனில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் மனோஜ் வந்துவிட நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்க பிறகு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் விஷயத்தை சொல்லி விடுகிறார் நான் டயட் இருக்கலாம்னு நினைக்கிறேன் ஆனா இந்த மீனா என்ன இருக்க விட மாட்டேன் போல இருக்கு என்று சொல்ல நீங்க கவலை விடுங்கம்மா எனக்கு தெரிஞ்ச டயட்டிசியன் ஒருத்தவங்க இருக்காங்க அவங்க கிட்ட சொல்றேன் என சொல்லுகிறார் மனோஜ். அவங்க கிட்ட சொன்னா உங்களுக்கு சீக்கிரமா உடம்பு குறைஞ்சிடும் என்று சொல்ல விஜயா சரி நான் அவங்ககிட்ட பேசுறேன் என சொல்லுகிறார். அப்புறம் நீ இந்த விஷயத்தை வீட்ல இருக்குற யார்கிட்டயும் சொல்லாத உன் பொண்டாட்டி கிட்டயும் சொல்லாத அப்புறம் என்ன பார்த்து கிண்டல் பண்ணுவாங்க என்று சொல்லி விடுகிறார்.

உடனே அண்ணாமலை நான் இன்னைக்கு ஸ்கூலுக்கு போயிட்டு வந்துடறேன் என்று சொல்ல எப்பவுமே புதன்கிழமைதான போவீங்க என்று கேட்க , இன்னைக்கு பேரெண்ட்ஸ் மீட்டிங் இருக்கு அதனால வர சொல்லி இருக்காங்க என்று சொல்லி கிளம்புகிறார் உடனே முத்து மீனாவை கூப்பிட்டு நீயும் கிரிஷ் பாக்கணும்னு சொன்னல்ல வா என்று கூப்பிட மீனாவும் வருவதாக சம்மதித்து விடுகிறார். உடனே அவர்கள் ஸ்கூலுக்கு வந்து விட மீனா கோவிலுக்கு போகணும்னு சொன்னாப்பா நான் கூட்டிட்டு போயிட்டு வந்துடறேன் நீங்க அதுக்குள்ள மீட்டிங் முடிஞ்சுச்சுனா சொல்லுங்க நான் இப்படியே கூட்டிட்டு போயிடறோம் என்று சொல்ல உங்க வேலைய பாருங்க நான் பாத்துக்குறேன் என்று சொல்லியும் நாங்க வரப்ப வேலை முடிஞ்சா வாங்க இல்லைன்னா நீங்க பாத்துட்டு வாங்க என்று சொல்ல அண்ணாமலை சரி என சொல்லிக் கிளம்பி விடுகிறார். சரி நம்ம கோவிலுக்கு போயிட்டு வரலாம் என்று சொல்ல மீனா இருங்க கிருஷ் பாத்துட்டு போயிடலாம் என்று சொல்லி வெயிட் பண்ண கிரிஷ் வருகிறார். ரோகினி அம்மா ஐயோ மீனா வேற வந்துட்டால எப்படி சமாளிக்கிறது என்று தெரியாமல் இருக்க கொஞ்ச நேரத்தில் கிருஷை அனுப்பிவிட்டு அவரும் கிருஷ்வோட மிஸ் கிட்ட பேசணும்னு சொன்னாங்க என்று சொல்லி சென்று விடுகிறார் சரியாக முகம் கொடுத்து பேசாததால் மீனா இவ்வளவு நாள் கழிச்சு பாத்தும் ரெண்டு நிமிஷம் கூட பேச மாட்டாங்க என்று சொல்ல சரி அவங்க தான் மிஸ் பாக்கணும்னு சொல்றாங்கல்ல விடு என்று முத்து சொல்லுகிறார்.

மறுபக்கம் ரோகினி வீடியோ காலில் பேச விக், கண்ணாடி மற்றும் மாஸ்க் போட்டுக் கொண்டு வித்யாவை வாய்ஸ் கொடுக்க சொல்லுகிறார். வீடியோ கால் ஆரம்பிக்க என்ன நடக்கிறது? ரோகினி எப்படி பேசுகிறார்?அதற்கு அண்ணாமலை என்ன ரியாக்சன் கொடுக்கிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Today Episode Update 22-02-25
SiragadikkaAasai Serial Today Episode Update 22-02-25