Web Ad 2

ஈஸ்வரி எடுத்த முடிவு, எழில் சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

Web Ads

ஈஸ்வரி பாக்கியாவையும் கோபியையும் சேர்த்து வைக்க முடிவெடுத்துள்ளார்.

BaakiyaLakshmi Serial Today Episode Update 22-02-25
BaakiyaLakshmi Serial Today Episode Update 22-02-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி ரூமில் சோகமாக உட்கார்ந்து கொண்டிருக்க கோபி வருகிறார் வந்தவுடன் ஏம்மா இப்படி சோகமா இருக்கீங்க என்று கேட்க, எனக்கு தான் பையன் பேர பசங்க பேர குழந்தைகள் சந்தோஷமா இருக்க கொடுத்து வைக்கல என்று சொல்லுகிறார் எல்லாரும் வீட்டிலேயும் நார்மலா நடக்குற விஷயம் கூட எனக்கு நடக்க மாட்டேங்குது என்று சொல்ல பிறகு நீ வீட்டை விட்டு போக தான் போறியா என்று கேட்கிறார் கோபி ஆமாம் என்று சொல்ல அதற்கு ஈஸ்வரி, கடைசி காலத்துல உன்ன பாத்துக்கறதுக்கு ஒரு ஆள் கண்டிப்பா தேவை இப்போ நான் பாத்துக்குறேன் எனக்கு அப்புறம் யார் பார்த்துப்பாங்க நீயும் பாக்கியம் சேர்ந்து வாழணும் என்று சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார்.

அது எப்படிமா முடியும் பாக்கியா என் மேல எவ்வளவு கோவமா இருக்கான்னு தெரியும் என்று சொல்ல இப்போ நீ பழைய மாதிரி இல்ல திருந்திட்டேன்னு எல்லாருக்கும் தெரியும் உன்னையும் உன் மனசுல இருக்குற குற்ற உணர்ச்சி எனக்கு புரியுது அது சரியா ஆகணும்னா நீ பாக்யா கூட சேர்ந்து வாழ்ந்தா மட்டும் தான் சரியாகும் என்று சொல்லுகிறார். ஆனால் கோபி அதற்கு பாக்யா சம்மதிக்க மாட்டா என்பதில் உறுதியாக இருக்க, நீ அந்த பிரச்சனையை விடு உனக்கு பாக்கிய கூட சேர்ந்து வாழ விருப்பமா என்று கேட்க கோபி தயங்கிக் கொண்டே இருக்க உடனே ஈஸ்வரி அப்போ உனக்கு பாக்கிய கூட வாழனும்னு விருப்பம் அவ்வளவுதானே உன் கண்ண பார்த்தாலே எனக்கு தெரியுது என்று சொல்லி அவரை முடிவு எடுத்துக் கொள்கிறார். இந்த பிரச்சனையை விடு பாக்கியா கூட உன்னை சேர்த்து வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு என்று சொல்லி விடுகிறார்.

பிறகு ஈஸ்வரி ராமமூர்த்தியின் போட்டோவின் முன் நின்று கோபி பாக்கியா கூட சேர்ந்து வாழ சம்மதிச்சுட்டான் எனக்கு நம்பிக்கை இருக்கு ரெண்டு பேரும் சந்தோஷமா வாழ்வாங்க என்று சொல்லிக் கொண்டிருக்க, பாக்யாவும் செல்வியும் வீட்டுக்கு வருகின்றனர். கிச்சனில் அவர்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்க ஈஸ்வரி வந்து உட்காருகிறார் சரி ஏதாவது வேண்டுமா என்று கேட்க எதுவும் வேண்டாம் என்று சொல்லுகிறார் உடனே பாக்யாவை சரி செய்ய சமையல் சூப்பரா இருந்துச்சு என்று எல்லாம் சொல்ல இன்னும் என் மேல கோவமா தான் இருக்கியா பாக்கியா என்று கேட்கிறார் உங்க மேல கோவமா இல்ல அப்படி பேசினீங்க என்று வருத்தமாக இருந்தது என்று சொல்லிவிட்டு சொந்தக்கார கதையை சொல்லுகிறார். அவர் கணவன் இறந்து விட்டதால் தனியாக கஷ்டப்பட்டு இருப்பதாக சொல்ல என்ன இருந்தாலும் ஒரு ஆம்பள துணை வேணும் என்பதை சொல்ல பாக்கியம் மீண்டும் புரிந்து கொள்கிறார். உடனே எத்தனையோ பேர் தனியா இருந்திருக்காங்க என்று சொல்ல எல்லாம் சொல்றதுக்கு கரெக்ட்டா தான் இருக்கும் இப்ப நான் உங்க மாமா போனதுக்கப்புறம் எவ்வளவு கஷ்டப்படுறேன் பாத்தியா என்று கேட்கிறார். மாமா மாதிரி ஒரு நல்ல மனுஷன் கூட வாழ்ந்துட்டு பிரிஞ்சா கஷ்டமா தான் இருக்கும் ஆனா உங்க பையன் கூட இருந்து பிரிஞ்சதுனால நான் சந்தோஷமா தான் இருக்கேன் என்று சொல்லுகிறார். உங்களுக்கு வேற ஏதாவது வேணுமா என்று கேட்க எதுவும் வேணாம் என்று எழுந்து சென்று இருக்கிறார். ஹாலுக்கு வந்து நின்ற ஈஸ்வரி பாக்யாவிடம் இது மாதிரி பேசினா அவ எதுக்கு எதிர் பேசிக்கொண்டே தான் இருப்பா வேற மாதிரி தான் டீல் பண்ணனும் என முடிவெடுக்கிறார்.

மறுநாள் காலையில் ஈஸ்வரி செழியன் இடம் கோயிலுக்குள் பேசிக்கொண்டிருக்க எழில் வருகிறார் செழியன் என்னடா நீயும் வந்திருக்க என்று கேட்க இல்ல நான் தான் வர சொன்னேன் எனவே ஈஸ்வரி சொல்லுகிறார் என்ன விஷயம் பாட்டி ஏதாவது பிரச்சனையா என்று கேட்க பிரச்சனை எல்லாம் ஒன்னும் இல்ல நான் ஒரு முடிவு பண்ணி இருக்கேன் என்று சொல்லுகிறார். பிறகு பாக்யாவையும் கோபியையும் சேர்த்து வைக்கும் விஷயம் குறித்து பேச, ஏழில் மறுக்கிறார். இப்போ உங்க அம்மாவுக்கும் உங்க அப்பாவுக்கும் வயசான காலத்துல யார் பார்த்துக்க முடியும் கோபிக்கு பாக்யாவும் பாக்கியாவுக்கு கோபியும் என்று வாழனும் என்று சொல்ல செழியன் அவர்கள் இரண்டு பேரும் விருப்பப்பட்டா சேர்ந்து வாழ்றதுல எனக்கும் விருப்பம் தான் என்று சொல்ல ஈஸ்வரி எழிலிடம் கேட்கிறார் எனக்கு விருப்பம் கிடையாது அப்படியே எங்க அம்மாக்கு நாங்க இருக்கோம். என்று சொல்ல அவ பசங்கள நம்பி இருக்க மாட்டா என்று சொல்ல அப்படியே எங்க அம்மாக்கு ஒரு துணை தேவைப்பட்டதுன்னா நான் வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணி வைப்பனே தவிர நான் இவர்கூட சேர்ந்து வாழணும்னு சொல்ல மாட்டேன் என்று சொல்லுகிறார் உடனே ஈஸ்வரி அது உங்க அம்மாவின் விருப்பப்பட்டு சொன்னா நீ சம்மதம் தெரிவிப்பியா என்று கேட்கிறார் அம்மா ஒத்துக்க மாட்டாங்க என்று சொல்லுகிறார்.

பிறகு ஈஸ்வரி என கேட்கிறார்? அதற்கு எழிலின் பதில் என்ன? செழியன் என்ன சொல்லுகிறார்?என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Today Episode Update 22-02-25
BaakiyaLakshmi Serial Today Episode Update 22-02-25