
வீட்டுக்கு வந்த அர்ச்சனா,சுந்தரவல்லி சொன்ன பதில்,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா,அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் அருணாச்சலம் சுந்தரவள்ளியிடம் நம்ம ஃபேமிலியா எங்கேயாவது ட்ரிப் போகலாமா என்று கேட்க சுந்தரவல்லி எதுக்கு என கேட்கிறார். ஏதாவது பிரச்சனை வந்துகிட்டே இருக்கு அதனாலதான் என்று கேட்க எங்க போகலாம் என்று சுந்தரவல்லி கேட்கிறார். தமிழ்நாட்டில் ஒரு இடத்தை அருணாச்சலம் சொல்ல தமிழ்நாடு இல்ல வேணாம் வெளியே சொல்லுங்க என்று சொல்ல கேரளா போகலாம் போட் ஹவுஸ் எல்லாம் சூப்பரா இருக்கும் என்று சொல்ல, ஏன் அங்க வந்து உங்க பையன் அசிங்கப்படுத்தவா என்று கேட்கிறார். உடனே சுந்தரவல்லி அது இருக்கட்டும் இந்த ட்ரிப்புக்கு யார் யார் வராங்க என்று கேட்க எல்லாரும் தான் என்று சொல்ல எல்லாரும்னா அதுதான் கேட்கிறேன் என்று சொல்லுகிறார். உடனே இப்ப என்ன நந்தினி வரக்கூடாது அதுதானே என்று சொல்ல தாராளமா வரட்டும் நான் வரமாட்டேன் என்று சொல்லி விடுகிறார். இதுக்கு ட்ரிப் போகாமலே இருக்கலாம் என்று அருணாச்சலம் சொல்லி விடுகிறார்.
அந்த நேரம் பார்த்து சூர்யா நடக்க முடியாமல் நடந்து வர சுந்தரவல்லி இவன் எதுக்கு இப்படி நடந்துட்டு வரான் என்று கேட்பதற்குள் சூர்யா தடுமாறி கீழே விழ சுந்தரவல்லி தூக்க போக சூர்யா தட்டி விடுகிறார். பிறகு நந்தினியை கூப்பிட்டு நீ இங்க இல்லாம எங்க போன என்று கேட்க நீ இல்லாததுனால கண்ட கண்ட வங்க எல்லாம் என்ன தூக்கி விடுறாங்க என்று சொல்ல உடனே சுந்தரவல்லி நான் கண்டவளா அவள பெத்தவ தானே நானே குடித்து குடித்து இவனுக்கு எதுவுமே பாசம் இல்லாம போயிடுச்சா. உடனே நான் உன்னை தொடக்கூடாதா உன்ன தொட்டா என்ன கம்பளி பூச்சி ஊறுற மாதிரி இருக்கா என்று கேட்க சூர்யா ஆமா, ஆமா டாடி அப்படித்தான் இருக்கு கம்பளிப் பூச்சி இல்ல விஷப் பூச்சி மாதிரி இருக்கு என்று சொல்லி கோபப்படுகிறார். அருணாச்சலம் ஏன்டா இப்படி எல்லாம் பேசுற என்று சூர்யாவிடம் சொல்ல, சுந்தரவல்லி கோபப்பட்டு நான் தொடக்கூடாதுன்னு சொல்றான் என்னங்க என்று கேட்க சரி வா என்று சுந்தரவல்லி சமாதானப்படுத்த கூட்டி செல்கிறார்.அவனால தனியா நடக்க முடியலன்னு கீழ விழுந்தான்னு தானே புடிக்க போன அதுக்கு இப்படியா பண்ணுவான் என்று கண் கலங்குகிறார். இதையெல்லாம் ரேணுகா கவனித்து கொண்டிருக்கிறார்.
உடனே அருணாச்சலம் கொஞ்சம் அமைதியா இரு சுந்தரவல்லி எதுவும் பேசாதே என்று சொல்ல நான் பேசாம இருந்துட்டா மட்டும் தியாகி என்று சொல்லிடுவீங்களா அவன் என்னை திட்டட்டும் பரவால்ல ஆனா அவன கவனிச்சுக்காம என்னால இருக்க முடியாது என்னை யாரும் கடைசி வரைக்கும் புரிஞ்சுக்கவே மாட்டீங்க எனக்கு மனசு சரியில்ல நான் கோவிலுக்கு போறேன் நான் கடவுள் கிட்ட சொல்லி அழுதுகிறேன் என்று சொல்லி கிளம்பி விட உடனே ரேணுகா இதை கவனித்து அர்ச்சனா அம்மா கிட்ட சொல்லிடலாம் என்று போன் பண்ணி சொல்லுகிறார்.
என்ன நடக்குது என்று அர்ச்சனா கேட்க நீங்க சொன்ன மாதிரி எல்லாத்தையும் சொல்லிட்ட வீடு பத்திகிட்டு எரியுது என்று சொல்லுகிறார். பிறகு மாதவி செய்த விஷயத்தையும் நந்தினி மன்னிப்பு கேட்ட விஷயத்தையும் சொல்ல சூப்பர் என்று சொல்லி அர்ச்சனா பாராட்டுகிறார். பிறகு இன்னொரு விஷயம் சொன்னதா உங்களுக்கு கால் பண்ண என்று சொல்லி சுந்தரவல்லி அம்மா சூரியா சாருக்கு சீக்கிரம் நல்லா ஆயிடனும்னு கோவிலுக்கு போய் இருக்காங்க என்று சொல்ல சரி நான் பார்த்துக்கிறேன் என்று அர்ச்சனா போனை வைக்கிறார். கோவிலுக்கு வந்து அர்ச்சனை தட்டை வாங்கி உள்ளே வந்த சுந்தரவல்லி கடவுளைப் பார்த்து சூர்யாவிற்காக வேண்டி கண்கலங்கி நிற்கிறார். அவன் என்ன திட்டட்டும் என்ன வேணா பண்ணட்டும் ஆனா அவன் பழைய சூர்யாவா என் முன்னாடி வந்து நிக்கணும் என்று அழுது கொண்டே வேண்டிக் கொள்கிறார். பேர் ராசி சொல்லுங்க என ஐயர் கேட்க அர்ச்சனா சூர்யாவின் பெயர் ராசி நட்சத்திரம் சொல்லி உடம்பு நல்லா ஆகணும்னு வேண்டி அர்ச்சனை பண்ணி கொடுங்க என்று சொல்லுகிறார். இதனைப் பார்த்து சுந்தரவல்லி அர்ச்சனா பூஜை பண்ணுவதை கவனித்துக் கொண்டிருக்கும் சுந்தரவல்லி ஐயர் அர்ச்சனாவிடம் உங்களுக்கு என்ன உறவு முறை வேண்டும் என்று கேட்க தெரிஞ்சவங்க பிரண்ட் என்று சொல்லுகிறார். அவருக்கு சீக்கிரம் நல்லா ஆகணும் இந்த பூஜையை சிறப்பா பண்ணி கொடுங்க என்று சொல்லுகிறார். பிறகு அவர்கள் பூஜை பண்ணி கொடுக்க சுந்தரவல்லி அம்மா நானே வெறும் அர்ச்சனதா பண்ற இவ எதுக்கு இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கா என்று யோசித்துக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து மண்டபத்தில் அர்ச்சனா பேசியதுதான் சுந்தரவல்லிக்கு நினைவு வருகிறது. இதனால் அர்ச்சனாவிடம் எதுவும் பேசாமல் சுந்தரவல்லி சென்று விட, உடனே அர்ச்சனா என்ன எதுவுமே பேசாம போயிட்டாங்க நம்மளே போய் மன்னிப்பு கேட்கிற மாதிரி பேசுவோம் என்று முடிவு எடுத்து வருகிறார்.
சுந்தரவல்லி அர்ச்சனை பொருளை கவரில் போட்டு கொடுங்க என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது அர்ச்சனா வெளியில் வந்து சுந்தரவள்ளியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். ஏதோ கோவத்துல உங்கள அது மாதிரி பேசிட்டேன் உங்கள மட்டும் இல்ல எங்க குடும்பத்துல இருக்குறவங்களையும் நான் மரியாதை இல்லாம பேசிட்டேன் எல்லாத்துக்கும் காரணம் சூர்யா மேல இருக்கிற அன்பு தான் காரணம் அதனாலதான் அப்படி பேசினேன் உங்ககிட்ட மன்னிப்பு கேட்கணும்னு எனக்கு தோணும் ஆனா உங்க கிட்ட எந்த மூஞ்சி வச்சு பேசணும்னு கூட எனக்கு தெரியல ஆனா இப்போ சூர்யாவுக்கு இப்படி ஆயிடுச்சுன்னு நெனச்சு நான் நைட்டெல்லாம் அழுது அழுது என் முகம் எல்லாம் வீங்கி போச்சு நான் சூர்யாவோட எவ்வளவு சந்தோஷமா இருக்கணும்னு ஆசைப்பட்டேன் தெரியுமா? அவன் எதோ ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருப்பானு நினைச்சேன் ஆனா இப்படி கேள்விப்பட்ட உடனே நான் துடிச்சு போயிட்டேன் என்று சொல்லி அழுகிறார். ப்ளீஸ் சாரி என்னை மன்னிச்சிடுங்க என்று கெஞ்சி கொண்டே கட்டிப்பிடித்துக் கொள்ள சுந்தரவள்ளியும் சரி சரி விடுமா என சொல்லுகிறார். சூர்யா எப்படி இருக்கான் என்று கேட்க நல்லா இருக்கான் என்று சொல்லுகிறார். ஒரே ஒருவாட்டி நான் வந்து சூர்யாவை பாக்கணும். நான் எந்த டிஸ்டர்பும் பண்ண மாட்டேன் நான் மறுபடியும் வரமாட்டேன். ஒருவாட்டி மட்டும் ப்ளீஸ் என்ன சுந்தரவல்லி இடம் கெஞ்சுகிறார்.
உடனே சுந்தரவள்ளியும் சரி சரி வா என்று அழைத்து செல்கிறார். ரூமில் சூர்யா போன் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்க ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி பார்த்த போன் பார்த்துட்டு இருந்தீங்க இப்பவும் பார்த்துக்கிட்டு இருக்கீங்க எடுத்து வச்சுட்டு தூங்குங்க என்று சொல்ல நீ என்ன அம்மா குழந்தை மிரட்டுற மாதிரி மெரட்டுற என்று சொல்ல ஆமா அம்மா சொன்னா மட்டும் கேட்டுருவீங்க என்று சொல்ல அம்மாவா என்ன சொன்ன என்று கேட்க ஒரு பெத்த புள்ளைக்கு உடம்பு முடியலன்னு துடிச்சி போய் கேக்குறாங்க அப்ப இந்த மாதிரி மூஞ்சால அடிச்ச மாதிரி பேசினா அவங்க மனசு வெறுத்து போவாது என்று கேட்க உடனே வெறுத்து போகல அதுதான் வேணும் என்று சொல்லுகிறார். எனக்கு புடிச்சத கதற கதற என்கிட்ட இருந்து பிரிச்சாங்க என்னோட கவலை என்னோட வேதனை எதுவுமே அவங்களுக்கு புரியல நான் மட்டும் எதுக்கு புரிஞ்சுக்கணும் என்று சொல்லிவிடுகிறார். என்னோட மூட ஸ்பாயில் பண்ண பார்க்காத இந்த சூர்யாவோட மூட யாராலும் ஸ்பாயில் பண்ண முடியாது என்று சொல்லிவிட,உடனே நந்தினி மறந்துட்டேன் என மாத்திரை எடுத்துக் கொடுக்க எனக்கு இதெல்லாம் வேணாம் எனக்கு நல்லா ஆயிடுச்சு என்று சொல்ல டாக்டர் உங்கள போட சொல்லி இருக்காங்க போடுங்க என்று சொல்லி கொடுக்க இது என்ன இவ்வளவு பெருசா இருக்கு என்னால போட முடியாது என்று சூர்யா சொல்லிக் கொண்டிருக்க சுந்தரவள்ளி காரில் அர்ச்சனா வந்து இறங்குகிறார். இத்துடன் எபிசோடு முடிவடைகிறது
இன்று வெளியான ப்ரோமோவில் அர்ச்சனா வீட்டுக்கு வர சுந்தரவல்லி வீட்டில் இருப்பார்களிடம் அவன பாக்கணும்னு மனசார வந்து பாக்குறா வேற யாராவது பார்பாங்களா? இதுவே பெரிய விஷயம் இல்ல என்று கேட்கிறார்.
சூர்யா ரூமில் படுத்துக் கொண்டிருக்க அர்ச்சனா என்னோட டார்கெட் எல்லாமே நீ தான் என சொல்லுகிறார். கிச்சனுக்கு வந்த சுந்தரவல்லி வீட்டுக்கு கெஸ்ட் வந்து இருக்காங்க அவங்களுக்கு என்ன வேணும் ஏது வேணும்னு குடிக்கிறதுக்கு விசாரிக்க மாட்டீங்களா? என்று கேட்கிறார். என்ன நடக்கும் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
