Pushpa 2

ரோகினி மீது முத்துவிற்கு வந்த சந்தேகம், மீனா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

ரோகினி மீது முத்துவிற்கு சந்தேகம் வந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பார்வதி,ரோகிணி பணம் கொடுத்த விஷயத்தை மீனாவிடம் சொல்ல மீனா முத்துவிடம் சொல்லுகிறார். இதில் ஏதோ ஒரு உள்குத்து இருப்பதாக சொல்லி யோசிக்கிறார் அதற்கு மீனா இந்த குடும்பத்தில் பிரச்சனை வரக்கூடாதுன்னு தான் சொல்லி இருக்காங்களே அதனாலதான் இருக்கும் என்று சொல்ல அந்த மனோஜும் பார்லர் அம்மாவும் அடுத்தவங்க நிம்மதி பத்தி யோசிக்கிற ஆளுங்க கிடையாது அவங்க ரெண்டு பேருமே சுயநலத்தை பற்றி மட்டும் தான் யோசிப்பாங்க இதுல ஏதோ ஒன்னு இருக்கு கண்டுபிடிக்கிறேன் என்று நினைக்கிறார்.

SiragadikkaAasai Serial Today Episode Update 05-12-24
SiragadikkaAasai Serial Today Episode Update 05-12-24

மறுநாள் காலையில் சுருதி கிச்சனுக்கு வர மீனா சமைத்துக் கொண்டு இருக்கிறார் உடனே இன்னைக்கு எனக்கு ஒரு ஆம்லெட் போட்டு குடுங்க மீனா என்று கேட்கிறார். டிபன் ரெடி ஆயிடுச்சு சாப்பிடுங்க சுருதி என்று சொல்ல,வேண்டாம் நான் கொஞ்சம் வெயிட் போட்டுட்டேன் இன்னைக்கு ரவி என்கிட்ட சண்டை போடும்போது பூசணிக்காய் என்று திட்டிட்டா அதனால நான் வெயிட் லாஸ் பண்ணிட்டு அவங்க கிட்ட வச்சிக்கிறேன் என்று சொல்லி பேசிக் கொண்டிருக்கிறார் அந்த நேரம் பார்த்து ரோகினி கிச்சனுக்கு வர மீனா நன்றி சொல்லுகிறார். எதற்கு என்று ரோகினி கேட்க நீங்க எனக்காக ரெண்டு லட்ச ரூபா உங்க தாலி அடமானம் வச்சு பார்வதி ஆன்ட்டி கிட்ட கொடுத்து இருக்கீங்க அதுக்கு தான் என்று சொல்ல உடனே ரோகினி அதிர்ச்சி அடைகிறார் அந்த பார்வதி ஆன்ட்டி ஒரு ஓட்ட வாய் போல இருக்கு என்று சொல்லி மனதுக்குள் நினைக்கிறார். உடனே ஸ்ருதி பார்வதி ஆன்ட்டி வீட்டுல காணாம போன பணத்தை யார் எடுத்தது என்று கேட்க இவ ஒருத்தி டிடெக்டிவ் மாதிரி கேள்வி கேட்டுகிட்டே இருப்பாய் என்று மனசில் நினைக்கிறார்.

உடனே ரோகிணி நம்ம வீட்ல பிரச்சனை நடக்கக்கூடாது தாங்க நான் இப்படி பண்ணல என்று சொல்ல உடனே சுத்தி அப்போ அந்த ரெண்டு லட்சம் எடுத்தவங்களை கண்டுபிடிக்கணும் என்று சொல்ல ரோகினி அதிர்ச்சி அடைகிறார் உடனே ஸ்ருதியும் ஈசியா கண்டுபிடிச்சிடலாம் அந்த டைம்ல பார்வதி ஆன்ட்டி வீட்டிற்கு யார் யார் வந்தாங்க என்பதை தெரிஞ்சுக்கிட்டாலே நம்ம கண்டுபிடிச்சிடலாம் என்று சொல்ல உடனே பயந்து கொள்ள அதுதான் பிரச்சனை வேண்டாம் என்று சொல்லி விட்டுட்டாங்க இதுக்கு அப்புறம் எதுக்கு அத பத்தி பேசிகிட்டு என்று சொல்லி அங்கிருந்து நழிவி விடுகிறார்.

உடனே சுருதி முத்து சொன்னதைப் போல் சொல்லுகிறார். ரோகினி உங்களுக்கு ஹெல்ப் பண்ற ஆள் கிடையாது அப்படி இருக்கும்போது அவங்க எப்படி பண்ணாங்க என்று சொல்லிவிட்டு இதில் ஏதோ ஒரு மர்மம் இருக்கு என்று சொல்லுகிறார் கண்டுபிடிப்போம் என்று சொல்லிவிட்டு சுருதியும் சென்று விடுகிறார் உடனே முத்து வர நான் சொன்ன மாதிரி பார்லர் அம்மாகிட்ட நன்றி சொன்னியா என்று கேட்க ஆமா சொன்னேன் என்று சொல்லுகிறார் ஸ்ருதியோ நீங்க சொன்ன மாதிரி இதுல ஏதோ ஒரு விஷயம் இருக்குன்னு சொல்றாங்க எனக்கும் சந்தேகமா இருக்கு என்று நீ தான் சொல்ல எனக்கும் இதே சந்தேகம் தான் அது மட்டும் இல்லாம மலேசியா மலேசியா மாமா அப்பா ஜெயில்ல இருக்காங்கன்னு என்னென்னமோ சொல்லிக்கிட்டு இருக்கு அந்த மர்மத்தை சீக்கிரம் கண்டுபிடிக்கிற என்று முத்து சொல்லுகிறார்.

மறுபக்கம் ஸ்ருதி மனோஜ் ஷோரூமில் பேசிக் கொண்டிருக்க ஒரு டிஸ்டி பொம்மை விற்பவர் கடைக்குள் வந்து உங்க கடையில் எவ்வளவு லாபமா வேலைக்கு போயிட்டு இருக்கு அதுக்கு எதுவும் கெடுதல் வந்து விடக்கூடாது என ஒரு திருஷ்டி போட்டோ வாங்கி மாட்டுங்க என்று சொல்ல எங்களுக்கு என்று மனோஜ் கேட்கிறார் நான் போய் எடுத்துட்டு வரேன் என்று சொன்ன அதை விஜயாவின் மாவு கொட்டிய போது எடுத்த புகைப்படம் ஃபோட்டோவாக உள்ளது. இதைப் பார்த்து கொஞ்ச நேரம் யோசித்த மனோஜ் ரோகினி போட்டோ எடுத்து பார்த்து ரோகினி இது ஆன்டி என்று சொல்லுகிறார். உடனே அந்த நபர் இது சொரூபரூபினி என்று சொல்ல வாய மூடியா இது எங்க அம்மா என்று கேட்கிறார் இது எங்கிருந்து வாங்கிட்டு வந்தீங்க என்று கேட்க, விஜயவாடா பேமஸா இருக்கு என்று சொன்ன அங்க இருந்து இங்க வந்திருக்கும் மனோஜ் என்று ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். பிறகு உன்கிட்ட இருக்கிற போட்டோ எல்லாத்தையும் நானே வாங்கிக்கிறேன் இதுக்கு மேல வெளியே வித்த உன் மேல போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன் என்று சொல்லி அந்த போட்டோவை வாங்கிக் கொள்கிறார்.

மீனா பூ கொடுத்துக் கொண்டிருக்கிற அந்த நபர் வந்து வெளியில் வண்டியில் காத்துக் கொண்டிருக்கிறார் உடனே மீனா வண்டியில் இருக்கும் பெப்பர்ஸ் பிரிவை எடுத்துக்கொண்டு அவரின் பக்கத்தில் நடந்து வர உடனே நம்ம வருவோம் என்று பாத்தா அவங்க வராங்க ஏதோ பிரச்சனை நடந்தால் அங்கிருந்து ஓட சொல்லி இருக்காரு அதனால அதையே செஞ்சிடுவோம் என்று அங்கிருந்து வண்டி எடுத்துக்கொண்டு சென்று விடுகிறார். உடனே ஆட்டோவில் சென்று கொண்டிருந்த சீதா மீனாவை பார்த்த ஆட்டோவின் சொல்லிவிட்டு மீனாவிடம் வருகிறார். உடனே சீதாவிடம் உன் பின்னாடி ஒருத்தன் சுத்திக்கிட்டு இருந்தா நீ என்ன செய்வ என்று கேட்க அவன் கிட்ட போய் எதுக்கு இப்படி பண்ற, என்ன லவ் பண்றியா எனக்கு அதுல எல்லாம் விருப்பமில்லை என்று சொல்லி சொல்லிடுவேன் என்று சொல்லுகிறார். மீனா இது எனக்கு தோணாமல் போயிடுச்சு என்று யோசிக்கிறார்.

மீனா சீதாவிடம் என்ன சொல்லுகிறார்? அதற்கு சீதாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Today Episode Update 05-12-24
SiragadikkaAasai Serial Today Episode Update 05-12-24