Pushpa 2

வீட்டுக்கு வந்த நந்தினி, சூர்யா..கடுப்பான சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

siragadikka asai serial episode update 23-01-25
siragadikka asai serial episode update 23-01-25

நேற்றைய எபிசோடில் இது என் தங்கச்சியால் வந்த பிரச்சனை நானே பாத்துக்கிறேன் நீங்க இங்க இருந்து போலனா இந்த போலீஸ் ஸ்டேஷனிலேயே என் உயிரை மாய்த்து கொள்வது தவிர எனக்கு வேற வழி தெரியல என்று சொல்லி அழுகிறார். உடனே சுதாகர் இப்படி நடித்து தான் சூர்யா தம்பியை ஏமாத்தி இருக்கா பங்காளியும் 15 வருஷமா இப்படித்தான் ஏமாத்திக்கிட்டு இருக்காங்க என்று சொல்ல நந்தினி மீண்டும் அருணாச்சலத்திடம் தயவு செய்து போயிடுங்க ஐயா என்று சொல்ல சூர்யாவை அழைத்துக் கொண்டு சென்று விடுகிறார்.

சூர்யா அருணாச்சலத்திடம் எப்படி டாடி போக முடியும் இங்க இருந்தா தானே ஏதாவது பண்ண முடியும் என்று சொல்ல, எப்படி இருந்தாலும் இது கொலை அட்டம்ட் தான் இருக்கிறது. இது மட்டும் இல்லாமல் அந்தப் பையன் இறந்துட்டான்னா கொலை கேஸா மாறிடும். நம்ம இதுக்கு முன் ஜாமின் கண்டிப்பா வாங்கணும் அதுக்கு சென்னை போய் தான் ஆகணும், சுந்தரவல்லி அவளுக்கு பயந்து வந்ததாகவே கூட இருக்கட்டும் நீ நேரா சென்னையில் போய் நேரா கோர்ட்டுக்கு போய் வேலையை பாரு என்று சொல்லி பிளான் போடுகின்றனர். நந்தினி ஃபேமிலி கிட்டையாவது சொல்லிட்டு போகலாம் என்று சொல்ல, அதெல்லாம் எதுவும் வேணாம் இப்போதைக்கு நம்ம வேலையை முடிக்கணும் வா என்று கூப்பிட்டு சொல்கிறார். சுந்தரவல்லி இடம் வந்து உன் கார்ல போ சூர்யா என்று சொல்ல, அவன் ஏன் அந்த கார்ல போகணும் என்று கேட்க அவள் கார் எப்படி வரும் அவன் தானே ஓட்டிட்டு வரணும் என்று சொல்லி கிளம்புகின்றனர்.

சுந்தரவல்லி காரில் வரும்போது ரொம்ப பீல் பண்றீங்களா அவ ரொம்ப தியாகி மாதிரி ஃபீல் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. ஒரு சின்ன பையனை போட்டு உயிர் போற அளவுக்கு அடிச்சிருக்கா என்றெல்லாம் பேச அதுதான் முன்னாடியே பேசிட்டு இல்ல கொஞ்சம் அமைதியா வா என்று சொல்லி வாயை அடக்குகிறார். அந்த நேரம் பார்த்து சுதாகர் ஃபோன் போட, நீங்க பண்ணது ரொம்ப பெரிய விஷயம் நான் மறக்கவே மாட்டேன் என்று சொல்ல இன்னொரு விஷயம் சொல்ல தான் பண்ண என்று சொல்லி இது அஞ்சு வருஷம் பத்து வருஷம் இல்ல ஆயிசுக்கு வெளியே வர முடியாது உங்க வீட்டுக்கும் வரமுடியாத அளவுக்கு வேலையை முடிச்சுட்டு வந்து நான் உங்களை சென்னையில பாக்குறேன் என்று சொல்ல ரொம்ப சந்தோஷம் என்று சொல்லி போனை வைக்கிறார். சுந்தரவல்லி வந்து இறங்க மாதவி நந்தினி சூர்யாவை காணும் என்று யோசித்துக் கொண்டிருக்க சுந்தரவல்லி சந்தோஷமாக ஆரத்தி தட்டு எடுத்துக் கொண்டு வர சொல்லுகிறார்.

எதுக்குமா என்று கேட்க சூர்யாவுக்காக என்று சொல்லுகிறார். சூர்யாவை காணும் என்று சொல்ல பின்னாடி கார்ல தான் வந்துட்டு இருக்கான் என்று சொல்லுகிறார். சூர்யா எப்படி நந்தினி விட்டுட்டு வர ஒத்துக்கிட்டா என்று சொல்ல அவன் என் பையன் நான் சொன்ன ஒரு காரணத்துக்காக அவளை ஊர்ல விட்டுட்டு என் பின்னாலேயே வந்துட்டான் என்று சொல்லிக் கொண்டிருக்க சூர்யா வந்து இறங்குகிறார். ஆரத்தி தட்டை சுந்தரவல்லி வாங்கி சூர்யாவிற்கு ஆரத்தி எடுக்க, சூர்யா காரைத் திறந்து நந்தினியை அழைத்து வருகிறார் இதைப் பார்த்த சுந்தரவல்லி அதிர்ச்சியாகி நிற்க மாதவி சுரேகா அசோகன் சந்தோஷப்படுகின்றனர்.

என்ன நடந்தது என்று யோசித்துக் கொண்டிருக்க சூர்யா நடந்ததை நினைத்துப் பார்க்கிறார். காரை பாதியில் நிறுத்தி பொங்கல் கொண்டாடியதிலிருந்து நடந்தது வரை எல்லாத்தையும் நினைத்துப் பார்த்துக் கொண்டு இருக்க அவரது நண்பர் போன் பண்ணுகிறார் பொங்கல் எல்லாம் எப்படி போச்சு என்று கேட்க நானே டென்ஷன்ல இருக்கேன் போனவை என்று சொல்ல கைபட்டு போனில் இருக்கும் வீடியோ ஆன் ஆகிறது. இதனை கவனித்த சூர்யா இது பொங்கல் ப்ரோக்ராம் அன்னைக்கு எடுத்த வீடியோ இல்லை என்று யோசிக்கிறார். உடனே டாடிக்கு போன் பண்ணி சொல்லிடலாம் என்று சொல்லி போன் போட்டு என்னோட கார் பஞ்சர் ஆயிடுச்சு. நான் போட்டுட்டு வரேன் நீங்க போய்க்கிட்டே இருங்க என்று சொல்ல, நாங்க வரட்டுமா என்று சொல்ல வேண்டாம் பக்கத்துல பஞ்சர் கடை இருக்கு நீங்க போங்க நான் போட்டுட்டு வந்துடறேன் என்று சொல்லி ஃபோனை வைக்கிறார். உடனே சுந்தரவல்லி அது எப்படி கரெக்டா பஞ்சர் ஆகும் ரெண்டு பேரும் ஏதாவது பிளான் பண்றீங்களா என்று கேட்க இதுல போய் என்ன பிளான் பண்றதுக்கு இருக்கு என்று அருணாச்சலம் சொல்லுகிறார்.

மறுபக்கம் சுதாகர் அந்த நகை கடைக்காரருடன் சேர்ந்து குடித்துக் கொண்டு சந்தோஷமாக நடந்த விஷயங்களை பற்றி பேசிக்கொண்டிருக்க குறைஞ்சது ஏழு வருஷமாவது தண்டனை கிடைத்திருக்கும் என்று பேசிக் கொண்டிருக்க சூர்யா காரில் வந்து இறங்குகிறார். நம்ம கூட சேர்ந்து குடிக்க வரான் போல என்று சொல்ல சூர்யா வந்த வேகத்தில் சுதாகரை அடித்து வெளுத்து வாங்குகிறார். உன்ன சும்மா விட மாட்டேன் டா எல்லாம் தப்பு நீ பண்ணிட்டு நந்தினி மேல பழி போடுறியா என்று சொல்லி அடிக்க சுதாகரின் டிக்கி ஓபன் ஆக அதில் கலர் பவுடருக்கு இத வச்சு தானே ஏமாத்துன என்று கையில் எடுத்த அதையே சுதாகர் மீது அடிக்கிறார். போலீஸ் ஸ்டேஷனில் எல்லா கிளியரா இருக்கும்போது கேஸ் போட வேண்டியதுதானே என்று சொல்ல நந்தினி நான் சட்டைய மட்டும் தான் பிடிச்ச நான் அந்த மாதிரி பண்ணல என்று சொல்ல அப்படி நீ சொல்லலாமா ஆனால் எமோஷனலா பண்றதுக்கெல்லாம் நான் பொறுப்பு ஏத்துக்க முடியாது கேஸ போடுங்க என்று சொல்லிவிடுகின்றனர்.

ஒரு நிமிஷம் என்று சூர்யா வர, எஃப் ஐ ஆர் போடாதீங்க உண்மையான அக்யூஸ்ட் நந்தினி கிடையாது. அது யாருன்னு நான் காட்டுகிறேன் என்று சொல்ல உங்க பொண்டாட்டிய காப்பாற்றுவதற்கு இப்படி பேசுறீங்களா என்று சொல்ல, எல்லாத்துக்கும் ஆதாரம் இருக்கு நான் ஆதாரத்தோட நிரூபிக்கிறேன் என்று சொல்லி வெளியில் வந்து சுதாகரை சட்டையைப் பிடித்துக் கொண்டு இழுத்து உள்ளே வந்து தள்ளி விடுகிறார். எல்லாத்துக்கும் இவன் தான் காரணம் எல்லாத்துக்கும் ஆதாரம் இருக்கு என்று சொல்லி போனை காட்டுகிறார். அதில் நந்தினி கண்ணில் பவுடர் இருக்கும்போது சுதாகர் தான் பிரசிடெண்ட் பையனை எட்டி உதைத்து அடிப்பட வைத்திருக்கிறார். இந்த வீடியோவை பார்த்து சிங்காரம் மற்றும் குடும்பத்தினர் உனக்கு என்ன பண்ணுனாங்க எங்க குடும்பத்தையே குறி வச்சு எதற்கு பழிவாங்குற நீ நல்லாவே இருக்க மாட்ட என்று சொல்லுகின்றனர். இவ பக்கா கிரிமினல் சார். இவனுக்கும் நந்தினிக்கும் ஏற்கனவே இருக்குற பகையை காரணமா வெச்சி இப்படி பண்ணிருக்கான் என்று சொல்ல இன்ஸ்பெக்டர் சுதாகரை அரைகின்றனர்.இத்துடன் எபிசோடு முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் அருணாச்சலம் நந்தினி இடம் இந்த வீட்டிலிருந்து உன்னை யாராலயும் எந்த சக்தியாலையோ வெளியே அனுப்ப முடியாது என்று ஆரத்தி எடுக்கிறார்.

மறுபக்கம் சுந்தரவல்லி என்ன பண்ணாலும் இவள ஒலிச்சு கட்ட முடியல திரும்ப வந்து கண்ணு முன்னாடி நிக்கிறா என்று கோபப்படுகிறார். தேவையில்லாம உங்க யாரையும் அதுல இழுத்து விட வேனா தான் கிளம்ப சொன்னேன் என்று அருணாச்சலத்திடம் நந்தினி சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்

siragadikka asai serial episode update 23-01-25
siragadikka asai serial episode update 23-01-25