Pushpa 2

சூப்பர் ஸ்டாரின் ‘ஜெயிலர்-2’ படத்தில், பாலகிருஷ்ணா இணைகிறார்?

ரஜினி நடிக்கும் ஜெயிலர்-2 படத்தில் பாலகிருஷ்ணா இணைகிறாரா? என்பது குறித்துக் காண்போம்..

லோகேஷ் இயக்கும் ‘கூலி’ திரைப்படத்தில், ரஜினிகாந்துடன் இணைந்து தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா, கன்னட சூப்பர் ஸ்டார் உபேந்திரா, மலையாள நடிகர் சொப்பின் ஷாகீர், மற்றும் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான், ஜூனியர் எம்.ஜி.ஆர். உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

மேலும், பாலிவுட் நடிகர் அமீர்கான் இந்த கேமியோ ரோலில் நடிக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தை சன் பிச்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். இதனைத் தொடர்ந்து, நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், ‘ஜெயிலர்-2’ படத்தில் ரஜினிகாந்த் இணைய உள்ளார்.

இந்த படத்தில் ப்ரீ புரோடக்சன் பணிகளில் நெல்சன் ஈடுபட்டு வருகிறார். கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ஜெயிலர் படத்தின் முதல் பாகம் உலக அளவில் சுமார் 650 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.

‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாகத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக, ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். இவருக்கு மகனாக வசந்த் ரவி நடிக்க, மிர்னா இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் மலையாள நடிகர் விநாயகன் வில்லனாக நடித்திருந்தார்.

மேலும் தமன்னா, யோகி பாபு, சுனில், உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். குறிப்பாக மோகன்லால், சிவ ராஜ்குமார் மற்றும் ஜாக்கி ஷெராஃப் போன்ற நடிகர்கள் கேமியோ ரோல்களில் நடித்திருந்தனர். முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் இரண்டாம் பாகத்தில் நடிக்க வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது. ஆனால், கதைக்கு ஏற்ப சில நடிகர்கள் மாற்றம் நடைபெறும் என தெரிகிறது.

மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் ரோலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், சிவராஜ் குமார் கடந்த 2 மாதங்களாக கேன்சர் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார்.

எனவே ‘ஜெயிலர் 2’ படத்தில் அவருக்கு பதிலாக, தெலுங்கு மாஸ் நடிகரான பாலகிருஷ்ணாவை நடிக்க வைக்க நெல்சன் முடிவெடுத்து, பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இத்தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

balakrishna is replacing shivaraj kumar in jailer 2
balakrishna is replacing shivaraj kumar in jailer 2