கோபப்பட்ட விஜயா, மனோஜ்க்கு அடித்த அதிர்ஷ்டம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!
விஜயா கோபப்பட மனோஜ்க்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் முத்து கார் பார்க்கிங் இடத்தில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது டிடெக்டிவ் பற்றி விசாரிக்க சொன்ன நீ விசாரிச்சீங்களா என்று கேட்க அவங்க 60,000 கேக்குறாங்க என்று சொல்ல அவ்வளவுக்கு நான் எங்க போறது அதுக்கு நானே கண்டுபிடிச்சிடுவேன் என்று சொல்லுகிறார்.அதற்கு செல்வம் எதுக்கு டிடெக்டிவ் என்று கேட்க இந்த பார்லர் அம்மா ஏதோ ஒரு தப்பு பண்ணுது அதனாலதான் வீட்டில் பிரச்சனை வந்துகிட்டே இருக்கு அதுல ஏதோ ஒரு மர்மம் இருக்கு அதை கண்டுபிடிக்கணும் என்று சொல்லி பேசிக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரம் பார்த்து மீனாவை ஃபாலோ பண்ணும் நபர் வர முத்து அவரை வர சொல்லுகிறார். அவங்க கிட்ட போய் பேசுறதுக்கு கை கால் எல்லாம் நடுங்குது என்று சொல்ல உடனே முத்து அவங்க வீடு தெரியும் இல்ல நேரா பழம் வாங்கிட்டு போய் அவங்க அப்பா கிட்ட உங்க பொண்ணு கல்யாணம் பண்ணிக்க விருப்பம்னு சொல்லு கண்டிப்பா ஒத்துப்பாங்க என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.
ஒரு பக்கம் மனோஜ் விஜயாவின் டிஸ்ட்ரி போட்டோவை காட்டி இதை ஊர் ஃபுல்லா வித்துக்கிட்டு இருக்காங்க ஆனால் எல்லாத்தையும் நானே வாங்கிட்டேன் என்று சொல்லி காட்டுகிறார் விஜயா டென்ஷன் ஆகி போட்டோவை தூக்கி வீச அண்ணாமலை வருகிறார் போட்டோவை பார்த்து சாமி போட்டோ எதுக்கு வெளியே போடுற விஜயா என்று கேட்கிறார். அதற்கு முத்து உடனே வந்து அது சாமி போட்டோ இல்லப்பா கண் திருஷ்டி போட்டோ என்று சொல்ல உடனே விஜயா முறைக்க இல்லப்பா அம்மா போட்டோ என்று சொல்லுகிறார். கொஞ்ச நேரத்தில் அண்ணாமலை சிரிக்க விஜயா முறைப்பதை பார்த்துவிட்டு நான் எங்கடா சிரிச்ச நான் எப்படி போட்டோவா கண்டுபிடிக்கிறேன் என்று சொல்லி விஜயாவின் பக்கத்தில் எடுத்துக் கொண்டு போய் போட்டோவை பார்த்து நீதான் விஜயா என்று சொல்லுகிறார். சுருதி சிரித்துக்கொண்டே இருக்க மீனாவின் மீது பழி போடுகிறார் விஜயா இந்த போட்டோவை நீ தானே வெளியே விட்ட, என்று சொல்லி சண்டை போட முத்து சப்போர்ட் செய்கிறார்.
மீண்டும் விஜயா மீனாவை திட்ட ஆரம்பிக்க மீனாக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை நான்தான் அன்னைக்கு போட்டோவை சோசியல் மீடியால போட்ட அதுதான் எடுத்து யாராவது இப்படி பண்ணி இருப்பாங்க என்று சொல்ல விஜயாவால் எதுவும் பேச முடியாமல் நிற்கிறார். உடனே மனோஜ் மா இத ஷோரூம் ல மாட்ட வா வேண்டாமா என்று கேட்க தேவையில்லை என்று சொல்லுகிறார். ஆனா நான் மாட்டிட்டோமா என்று சொல்ல யாரை கேட்டு மாட்ன தூக்கி வெளியே போடு என்று சொல்லுகிறார் உடனே முத்து வெளியே போட்ட அந்த போட்டோவை வேற ஒருத்த இடத்துல போய் அவளுக்கு அதிர்ஷ்டம் வந்துரும் என்று மனோஜிடம் சொல்ல அதுவும் சரிதான் என்று யோசிக்கிறார்.
மீண்டும் இவ இந்த வீட்டுக்கு வந்ததிலிருந்து எனக்கு பிரச்சனையா தான் இருக்கு என்று சொல்ல அண்ணாமலையும் சேர்ந்து கிண்டல் அடிக்க விஜயா வெறுப்பேரி உள்ளே சென்று விடுகிறார்.
மனோஜ் ஷோரூம்க்கு வர அங்கு வேலை செய்பவர் விஜயாவின் கண்திருஷ்டி போட்டோவை மாற்ற உடனே மனோஜ் கோபப்பட்டு அதை கழட்டி எடுத்துக்கொண்டு போய் வைக்க சொல்கிறார் உடனே சந்தோஷி சார் கால் செய்து 10 லட்சம் இன்சென்டிவ் கொடுத்திருப்பதாக சொல்ல உடனே அந்த நபரை கூப்பிட்டு போட்டோவை திரும்பவும் மாட்டி பூ வைக்க சொல்லுகிறார் ரோகிணி இப்படியெல்லாம் பண்ண வேண்டாம் அப்புறம் ஆன்ட்டி நம்மல திட்டுவாங்க பணத்துக்காக பண்றோம்னு நினைச்சுப்பாங்க என்று சொல்ல சரி எடுத்துண்டு போய் வெச்சிடு என்று சொல்லுகிறார் மனோஜ். உடனே கொஞ்ச நேரம் கழித்து மனோஜின் நண்பர் வருகிறார் இப்பதான் சந்தோஷி சார் கால் பண்ணி பத்து அப்படி என்று ஆரம்பித்து அப்படியே அமைதியாகி விட, ஓ என்கிட்டே சொல்ல மாட்டியா நான் உனக்கு ஒரு நல்ல விஷயம் சொல்லலாம்னு வந்தேன் என்று சொல்ல அவர் சென்று விடுகிறார் மனோஜ் உடனே பின்னாலே சென்று அவரை நிறுத்தி என்ன விஷயம் என்று கேட்கிறார். நான் பார்க்கல ஒரு ஆள பார்த்தேன் என்று சொல்ல பார்க்கில் இருக்கிறவங்களுக்கு வேலை வேணுமா அவங்கள நல்லாவே செய்ய மாட்டாங்க முடியாது என்று சொல்லுகிறார்.
அந்த நபர் மனோஜ்க்கு என்ன சொல்லுகிறார்? மனோஜின் முடிவு என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.