Pushpa 2

ஈஸ்வரியா? ராதிகாவா? கோபி எடுக்கப் போக முடிவு என்ன? இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

கோபி எடுக்கப் போகும் முடிவு என்ன என்பதை பார்க்கலாம்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலஷ்மி.இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ராதிகா கத்தி சண்டை போட்டுக்கிட்டே இருந்தா அதனால தான் உள்ள விடலை என்று ராதிகாவின் மேல் பழி சொல்லுகிறார் ஈஸ்வரி. உடனே நர்ஸ் திரும்பவும் பிரச்சனையை ஆரம்பிச்சிட்டீங்களா இது ஹாஸ்பிடல் தெரிஞ்சுக்கோங்க என்று சொல்ல இவரை முதல்ல போக சொல்லுங்க இவர் இருந்தாலே டென்ஷன் தான் என்று சொல்ல ராதிகா வெளியே சென்று விடுகிறார். உடனே கோபியிடம் இவர் கூட வாழறதுக்காகவாடா எங்க எல்லாரையும் விட்டுட்டு வந்தா என்று சொல்ல கோபி கண்கலங்குகிறார். எப்ப பாத்தாலும் கத்திகிட்டே இருக்கா என்று சொல்ல உடனே ஈஸ்வரி உனக்கு இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க நீ நேரா வீட்டுக்கு வந்துடு என்று சொல்லுகிறார் ஆனால் கோபி தயங்க செழியன் மற்றும் இனியா இருவரும் கெஞ்சி கூப்பிடுகின்றனர் என்னம்மா இப்படி பேசுறீங்க என்று சொல்ல அங்க போனா உன்ன சாவடிச்சிடுவ ஏற்கனவே என் புருஷன் போயிட்டாரு உண்மையும் அப்படி விடமாட்டேன் என்று சொல்லி ஈஸ்வரி கண்கலங்குகிறார்.

baakiyalakshimi serial today episode 06-12-2024
baakiyalakshimi serial today episode 06-12-2024

கொஞ்ச நேரம் கழித்து டாக்டர் வந்து செக் செய்துவிட்டு கோபி நல்லா இருக்காரு அவருக்கு டயட் ஃபுட் கொடுத்து நிறைய வேலை வாங்காம பத்திரமாக பாத்துக்கோங்க. என்று டாக்டர் சொல்லிவிட்டு அவரை இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிட்டு அதுக்கப்புறம் செக்கப் கூட்டிட்டு வாங்க என்று சொல்லுகிறார்.

உடனே ராதிகா ஆம்புலன்ஸ்ல அரேஞ்ச் பண்ணவா இல்ல கார்ல கூட்டிட்டு போகலாமா என்று கேட்க நீ எதுக்கு அத பத்தி கவலைப்படற அவனை நாங்க தான் கூட்டிட்டு போக போறோம் என்று சொல்லுகிறார். உடனே எழில் அது எப்படி பாடடி நீங்கள் கூட்டிட்டு போக முடியும் அவங்க தானே கூட்டிட்டு போகணும் என்று சொல்லுகிறார். ஹாஸ்பிடல் பில் வர, ராதிகா நான் கற்ற செழியா என்று சொல்ல வேணாம் பில்லுல நான் பாத்துக்குறேன் என்று சொல்லுகிறார் உடனே ஈஸ்வரி அப்பாவோட பிள்ளை பையன் கட்டக்கூடாதா? என்று கேட்டு வம்பு இழுக்கிறார்.

உடனே எழில் பாக்யாவிற்கு ஃபோன் போட்டு பாட்டி அவர நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரதா சொல்றாங்களே உங்கிட்ட சொன்னாங்களாமா என்று கேட்க ஆமா சொன்னாங்கன்னு முடியாதுன்னு சொல்லிட்டேனே என்று சொல்ல நீங்க கூட்டிட்டு வர்றதுல உறுதியா இருக்காங்க அவங்க கிட்ட சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க என்று சொன்னவுடன் பாக்யா நான் உடனே அங்க வரேன் என்று சொல்லுகிறார். உனக்கு இவன் போன் பண்ணி வர சொல்லிட்டா நான் என்று ஈஸ்வரி கேட்க கோபிய நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம் என்று சொல்லுகிறார் அதுக்குத்தான் நான் முடியாதுன்னு வீட்டிலேயே சொல்லிட்டேனே என்று சொல்ல உங்க யாருக்கும் ஏன் என்னோட தவிப்பு புரிய மாட்டேங்குது என்று கேட்கிறார்.

ஒரு பொண்டாட்டியா என்னோட சூழ்நிலையும் நீங்க ஏன் புரிஞ்சுக்க மாட்றீங்க என்று ராதிகா கேட்கிறார் உன் கழுத்துல தாலி கட்டிட்டா மட்டும் பொண்டாட்டி ஆயிட மாட்ட ஒரு உயிருக்கு போராடிகிட்டு இருக்கும்போது போன் பண்ணா நீ எடுத்தியா என்று கேட்க அது ஒரு சூழ்நிலை அந்த மாதிரி ஆயிடுச்சு என்று சொன்ன அப்போ உன்ன நம்பி எப்படி அனுப்ப முடியும் என்று ஈஸ்வரி கேட்கிறார் அதுவு இல்லாம டென்ஷன் ஆகம பத்திரமா பாத்துக்கணும் என்று சொல்லி இருக்காங்க ஆனா அந்த வீட்ல அப்படி இருக்கவே முடியாது என்று முடிவில் உறுதியாக இருக்கிறார் ஈஸ்வரி.

பாக்யா அவர அவங்க வீட்டுக்கு அனுப்புறது தான் கரெக்டா இருக்கோம் என்று சொல்ல நீ வீட்ல விடலன்னா என்ன நான் வாடகை விட்டு பார்த்துவிட்டு என் புருஷனுக்கு வர பிம்ஷன்ல கோபியை காப்பாத்திடுவன் என்று சொல்லுகிறார். உடனே எழில் நீங்க ரெண்டு பேரும் நான் அங்க கூட்டிட்டு போகணும்னு சொல்லிட்டு அம்மாவை தான பார்த்துக்க சொல்வீங்க என்று சொல்ல ஓ அப்படி அதனாலதான் நீ வீட்டுக்கு வர வேண்டாம்னு சொல்றியா பாக்கியா நீ பார்த்துக்க வேண்டாம் நானே சமைக்கிறதுல இருந்து எல்லாமே என் பையனுக்கு பாத்துப்ப என்று சொல்லுகிறார். உடனே ராதிகா நான் தான் கூட்டிட்டு போவேன் என்று சொல்லி உறுதியாக இருக்க சரி கோபி நீ கூட்டிட்டு போ சொன்னா நீ தாராளமா கூட்டிட்டு போ அப்படி இல்லன்னா இங்கிருந்து போயிடுவியா என்று கேட்க சரி என்று சொல்லிவிட்டு கோபியிடம் பேச போகிறார்.

நான் உங்களை நல்லா பாத்துப்பேன் கோபி நான் உங்க கூட சண்டை போடக்கூடாதுன்னு தான் நினைக்கிறேன் ஆனா சந்தர்ப்ப சூழ்நிலை மட்டும் தான் அப்படி அமையுது நீங்க எப்பவுமே பாக்யாவை பத்தி பேசிகிட்டு இருக்குறதுனால மட்டும்தான் எனக்கு கோவம் வருது மத்தபடி உங்கள நான் நல்லா தான் பார்த்திருப்பேன் நம்ம வீட்டுக்கு போகலாம் கோபி என்று பேசிக் கொண்டிருக்க உடனே ஈஸ்வரி வந்து நீ எவ்வளவு நேரம் பேசுவேன் கிளம்பு என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். உடனே ஈஸ்வரி உன் மேல கோவம் இருந்ததெல்லாம் உண்மைதான் ஆனா இப்ப கொஞ்சம் கூட இல்ல கோபி எனக்கு நீதான் முக்கியம் என்று சொல்ல உடனே இனியா நீங்க வீட்டுக்கு வந்துருங்க டாடி, உங்கள பாக்கணும் நான் வேற ஒருத்தர்கிட்ட போய் பர்மிஷன் கேட்டு நின்னு அசிங்கப்பட முடியல என்று கண் கலங்க கோபியா இனியாவை கட்டிப்பிடித்து கொள்கிறார். கோபி ராதிகாவிடம் செல்வாரா? இல்லை ஈஸ்வரி உடன் செல்வரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

baakiyalakshimi serial today episode 06-12-2024
baakiyalakshimi serial today episode 06-12-2024