Pushpa 2

வேலைக்கு போகும் அண்ணாமலை,முத்து சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

அண்ணாமலை எடுத்த முடிவால் முத்து வார்த்தை ஒன்றை சொல்லி உள்ளார்.

siragadikka asai serial today episode 09-12-2024

siragadikka asai serial today episode 09-12-2024

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மனோஜ் பிசினஸில் 10 லட்சம் ப்ராபிட் வந்து இருப்பதாக சொல்ல குடும்பத்தினர் அனைவரும் அவருக்கு வாழ்த்து சொல்கின்றனர். இது மட்டும் இல்லாமல் விஜயாவிற்கு தங்க வளையலும் ரோகினிக்கு தாலி செயின் மற்றும் அண்ணாமலைக்கு வேட்டி சட்டை என வாங்கி கொடுத்துள்ளார். இது மட்டும் இல்லாமல் இன்னொரு குட் நியூஸ் இருக்கு என்று சொல்லி பீச் ஹவுஸ் வாங்க போகும் விஷயத்தை சொல்ல விஜயா துள்ளி குதித்து சந்தோஷப்படுகிறார். பிறகு மீனா மேலே தனியாக நின்று யோசித்துக் கொண்டிருக்க முத்து வருகிறார்.என்ன பண்ணிக்கிட்டு இருக்க என்று கேட்ட உங்கள் அண்ணன் வீடு வாங்கிட்டா தனியா போயிடுவாரு, உங்களோட அம்மாவும் போக வாய்ப்பு இருக்கு ஸ்ருதிய அவங்க அம்மா எப்ப கூட்டிட்டு போவாங்க தெரியாது.இந்த குடும்பம் பிரிஞ்சு போயிடுமோன்னு யோசிச்சிட்டு இருக்கேன் என்று சொல்ல அதற்கு முத்து போறதும் போகாது தான் அவங்களோட முடிவு இது யாராலும் மாற்ற முடியாது என்று சொல்ல ஆனால் மாமா ஓட காலம் வரைக்கும் வீட்ல எல்லாரும் ஒண்ணா வாழனும்னு தான் ஆசைப்படுகிறார் என்று சொல்லுகிறார்.

கரெக்ட் மீனா நீங்க யோசிக்கிற அளவுக்கு கூட நான் யோசிக்கல நீ எப்பவுமே கரெக்டா யோசிப்ப நான் போய் இப்பவே அவன் கிட்ட வீடு வாங்க வேணான்னு சொல்லிடறேன் என்று சொல்ல மீனா தடுக்க ஏன் தடுக்குற மீனா இருக்கு காலைல சொல்லட்டுமா என்று சொல்ல நான் இப்பதான் சொல்ல போறேன் என்று முத்து சொல்லுகிறார். இப்ப இல்ல நீங்க எப்பவுமே சொல்ல கூடாது அப்புறம் உங்களுக்கு பொறாமை சொல்லுவாங்க என்று சொல்லுகிறார் மீனா. அதுக்கு என்ன பண்றது என்று கேட்ட எதுவுமே பண்ண வேணாம் அப்படியே விட்டுவிடுங்கள் என்று மீனா சொல்லி விடுகிறார். பிறகு முத்து மீனாவிடம் முத்தம் கேட்க முதலில் மறுத்த மீனா வேகமாக கன்னத்தில் கொடுத்துவிட்டு ஓடிவிடுகிறார்.

ரோகினி க்ரிஷ் பார்க்க வீட்டுக்கு வர நீ இன்னும் ஸ்கூலுக்கு கிளம்பலையா போய் கிளம்பு நான் விட்டுட்டு வரேன் வந்து சொல்லி அனுப்பி வைக்கிறார். உடனே ரோகினி அம்மாவை உட்கார வைத்து வீடு வாங்க போகும் விஷயத்தை சொல்ல அவரும் சந்தோஷப்படுகிறார். ஆனால் அவசரப்பட்டு இவ்வளவு பெருசா வாங்கணுமா சின்ன வீட்ல இருந்தாலும் சந்தோஷமா நிம்மதியா இருக்கலாம் என்றெல்லாம் அட்வைஸ் கொடுக்க ரோகினி கடுப்பாகிறார். நான் உன்கிட்ட ஒரு குட் நியூஸ் சொன்னா நீ சந்தோஷப்படு அத விட்டுட்டு அட்வைஸ் எல்லாம் பண்ணாத என்று டென்ஷன் ஆகி சொல்ல கிரிஷ் கிளம்பி வந்தவுடன் அம்மாவிடம் சொல்லிவிட்டு ரோகிணி ஸ்கூலுக்கு அழைத்து செல்லுகிறார்.

மறுபக்கம் அண்ணாமலை வேலைக்கு கிளம்ப முத்து நான் தான் வேணான்னு சொன்னேன்லப்பா ஏன்பா இப்படி பண்ற என்று சொன்ன உடனே அங்கு வந்த மனோஜ் ஸ்கூல்ல வேலைன்னு சொல்றீங்க அப்போ செக்யூரிட்டியா என்று கேட்க முத்து அவரை அடிக்கப் போகிறார். அதெல்லாம் ஒன்னும் இல்ல அக்கவுண்ட்ஸ் பார்க்கிற வேலைதான் ஈசி தான் அது வாரத்துல ஒரு நாள் தான் என்று சொல்ல ரவி மற்றும் ஸ்ருதி சம்மதம் தெரிவிக்கின்றனர். விஜயாவும் வாரத்துல ஒரு நாள் தானே போயிட்டு வரட்டுமா என்று சொல்ல மீனா வருகிறார் முத்து மீனாவிலும் கேட்க வேலைக்கு போறது மாமாவோட விருப்பம் அதனால அவர் இஷ்டமா இருக்கட்டும் என்று சொல்ல சொல்லுகிறார்.

முத்துவின் முடிவு என்ன? அண்ணாமலை என்ன சொல்ல போகிறார்? விஜயா என்ன செய்யப் போகிறார்? என்பதை உடனே எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial today episode 09-12-2024

siragadikka asai serial today episode 09-12-2024