ரஜினியின் ‘கூலி’ படத்தில் நடிக்க, தனுஷின் (ரீல்) தம்பிக்கு வந்ததே வாய்ப்பு
‘சில நேரங்களில், தேடும்போது கிடைக்காதது, தேடலை நிறுத்தும்போது தானாக கிடைத்து விடும். அதுபோல, இதோ ஓர் அதிர்ஷ்டம் ஒருவருக்கு நிகழ்ந்திருக்கிறது.
ஆனால், அது தனுஷுக்கு அமையாத ஒரு வாய்ப்பு, அவரது ரீல் தம்பிக்கு கிட்டியிருக்கிறது. சரி, விஷயத்திற்கு வருவோம்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தில், பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிப்பதாக தகவல் வெளியான தகவல் உண்மை தான். படத்தில், ‘அமீர்கான் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்’ என்றார் லோகேஷ்.
இந்நிலையில், அமீர்கான் தொடர்பான காட்சிகளை படமாக்க ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு செல்கிறது படக்குழு. ஜெய்ப்பூர் ஷூட்டிங்கில் ரஜினிகாந்தும் கலந்து கொள்வார் என தெரிகிறது.
29 ஆண்டுகள் கழித்து அமீர்கானும், ரஜினிகாந்தும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கிறார்கள். முன்னதாக, கடந்த 1995-ம் ஆண்டு வெளியான Aatank Hi Aatank இந்தி படத்தில் ரஜினியும், அமீர்கானும் சேர்ந்து நடித்தார்கள்.
பாலிவுட்டில், ஆக்டிங் ஜாம்பவான் அமீர்கான், ரஜினி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதால், கூலி படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் எகிறியிருக்கிறது.
முன்னதாக, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான கஜினி படத்தின் இந்தி ரீமேக்கில் மிரட்டியிருந்தார் அமீர்கான். அதிலிருந்து அவரை இந்தி கஜினி என்றே தமிழ் ரசிகர்கள் அழைக்கிறார்கள்.
அமீர்கான் தமிழ்ப் படத்தில் நடிப்பது இதுவே முதல் முறையாகும். முன்னதாக ‘வேட்டையன்’ படம் மூலம் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தமிழ்த் திரையுலகிற்கு வந்தார். இதையடுத்து, மீண்டும் ஒரு பாலிவுட் பிரபலம் ரஜினி படம் மூலம் கோலிவுட் வந்திருக்கிறார்.
இந்நிலையில், தன் முதல் படமான ‘மாநகரம்’ படத்தின் ஹீரோ சந்தீப் கிஷனை, ‘கூலி’ படத்தில் நடிக்க வைக்கிறார் லோகேஷ்.
‘ராயன்’ படம் ரிலீஸானதில் இருந்து சந்தீப் கிஷனை, ராயன் தனுஷ் தம்பி என்றே ரசிகர்கள் அழைக்கிறார்கள். ரஜினியின் படத்தில் நடிக்க வேண்டும் என தனுஷ் தவமாய் தவமிருந்து வருகிறார். தன் ஆசையை பலமுறை வெளிப்படையாக சொல்லிவிட்டார். ஆனால், அது இன்னும் நிறைவேறவில்லை.
இந்நிலையில், தனுஷின் ரீல் தம்பி சந்தீப் கிஷனுக்கு அந்த அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. முன்னதாக, ராயனின் தங்கை துஷாரா விஜயனும் ‘வேட்டையன்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
எப்படியோ, ‘கூலி’ படத்தின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் ரூ.1000 கோடியை தாண்டி மெகா சாதனை படைக்கட்டும்.!