Pushpa 2

ரோகினி எடுத்த முடிவு, கோபத்தில் கிரிஷ், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

ரோகினி முடிவு எடுக்க கிரிஷ் கோபப்பட்டுள்ளார்.

siragadikka asai serial episode update 10-12-2024
siragadikka asai serial episode update 10-12-2024

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் அண்ணாமலை வேலைக்கு போவதால் உள்ளே இருந்து ஓடி வந்து விஜயா சகுனம் பார்த்து வழி அனுப்பி வைக்கிறார்.ரோகினி கிருஷை ஸ்கூலுக்கு ஆட்டோவில் அழைத்துக் கொண்டு வர ஸ்கூலில் நடந்த விஷயங்கள் குறித்து ரோகினி இடம் க்ரிஷ் பேசிக் கொண்டு வருகிறார். எனக்கு எல்லாரும் பிரெண்ட் ஆயிட்டாங்க அம்மா இன்னைக்கு ஒரு பிரெண்டுக்கு பிறந்தநாள் அவ வீட்டுக்கு எங்களை கூப்பிட்டு இருக்கா கேக் கட் பண்றதுக்காக என்று சொல்ல அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் எங்கயுமே போகக்கூடாது என்ன பத்தி எங்கேயோ சொல்லக்கூடாது என்று சொல்ல கிரிஷ் முகம் வாடுகிறது பிறகு ரோகிணி அவரை சமாதானப்படுத்துகிறார். பிறகு அண்ணாமலையை ஸ்கூலில் டிராப் பண்ணிய முத்து போகாமல் மீண்டும் அண்ணாமலையை வீட்டுக்கு கூப்பிடுகிறார்.

திருப்பியும் முதலில் இருந்து ஆரம்பிச்சுட்டியா என்று கேட்டு முத்துவை போக சொல்லுகிறார். முத்துவும் அண்ணாமலையும் பேசிக்கொண்டிருக்க உள்ளே வந்த ரோகினி இருவரையும் பார்த்து அதிர்ச்சி அடைகிறார் கிருஷ் அவர்களை கூப்பிட போக அவன் வாயை பொத்தி ரோகினி ஒளிந்து கொள்கிறார் அவர்கள் சென்றவுடன் வாட்ச்மேன் இடம் அவர் இங்கே எதற்கு வந்திருக்காரு என்று கேட்க அக்கவுண்ட்ஸ் பாக்க ஜாயின் பண்ணி இருக்காரு டெய்லி வருவாரா என்று கேட்க இல்ல வாரத்துல ஒரு வாட்டி வருவாரு புதன்கிழமை மட்டும் என்று சொல்லுகிறார் உடனே ரோகிணி இன்னைக்கு ஸ்கூலுக்கு போக வேண்டாம் என்று கிருஷை அழைத்துக் கொண்டு வந்து விடுகிறார். இன்னைக்கு என்னோட ஃப்ரெண்ட் பர்த்டே கண்டிப்பா போவேன் என்று சொல்ல வலுக்கட்டாயமாக கூட்டிக் கொண்டு வந்து விட க்ரிஷ் கோபமாக ரூமுக்குள் சென்று கதவை சாத்தி விடுகிறார் ரோகிணியின் அம்மா என்னாச்சு எதுக்கு அவனை கூட்டிட்டு வந்த என்று சொல்ல அங்கு நடந்த விஷயங்களை ரோகினி அம்மாவிடம் சொல்லுகிறார்.

இவ்வளவு நாள் வீட்டில் இருந்த மனுஷன் வேலைக்கு போனதும் இல்லாம கரெக்டா உன் பையனோட ஸ்கூல்ல வேலைக்கு போய் இருக்காத பார்த்தா பயமா இருக்கு உண்மைய சொல்லிடு என்று சொல்ல சொல்லிவிட்டு உன்கூட வந்து உட்கார்ந்து சொல்றியா ஏற்கனவே நீ செலக்ட் பண்ண வாழ்க்கையை லைஃபே போயிடுச்சு ஆனா இது நான் எனக்காக தேடிக்கிட்ட வாழ்க்கை இது எப்பயோ நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று சொல்லுகிறார். எவ்வளவு நாளைக்கு இது மாதிரி பயந்துட்டு வாழ முடியும் என்று சொல்ல அதை நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லிவிடுகிறார்.

முதல்ல என்னோட மாமனார் அந்த வேலையிலிருந்து நிக்க வைக்கணும் ஏதாவது பண்றேன் என்று யோசிக்கிறார். உடனே மனோஜ் போன் போட நாங்க அந்த வீடு போய் பார்த்து பைனல் பண்ண போக போறோம் நான் கிளம்புறேன் என்று சொல்லுகிறார்.

மனோஜ் மற்றும் ரோகினி வீடு பார்க்க செல்ல அவர்களுக்கு வீடு பிடிக்கிறதா? என்ன சொல்லப் போகிறார்கள் என்பதை எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial episode update 10-12-2024
siragadikka asai serial episode update 10-12-2024