Pushpa 2

பாட்டுப் பாடி ரொமான்ஸ் பண்ணும் முத்து, மீனா.. ரோகினி எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

முத்துவும் மீனாவும் பாட்டு பாடி ரொமான்ஸ் செய்ய, ரோகினி முடிவு ஒன்று எடுத்துள்ளார்.

siragadikka asai serial episode update 10-01-25
siragadikka asai serial episode update 10-01-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கதிர் பற்றி ஒரு நடிகரிடம் விசாரித்ததாகவும், அவர்களுடைய ஃபோட்டோ இருந்தால் நன்றாக இருக்கும் விசாரிக்க என்று முத்து சொல்லிக் கொண்டிருக்க மீனா கோயிலுக்கு இவங்க பணம் கொடுக்க போனாங்களே அந்த சிசிடிவி ல பார்த்தா தெரியும் என்று சொல்லி ஐடியா கொடுக்கிறார்.உடனே முத்து இது நல்ல ஐடியாவா இருக்கு என்று சொல்ல நான் கேட்டா கொடுப்பாங்க நான் வாங்கி தரேன் என்று மீனா சொல்லுகிறார். ஆனால் ரோகினி வேண்டாம் மீனா நீங்க இதுக்கு மேல எந்த உதவியும் பண்ண வேணாம் என்று சொல்லுகிறார். எதுக்கு ரோகிணி அப்படி சொல்றீங்க என்று கேட்க நீங்க உங்க வேலையெல்லாம் விட்டுட்டு எங்களுக்காக எதுவும் செய்ய வேணாம் அப்புறம் முத்து காலம் ஃபுல்லா இதையே சொல்லிக் காட்டிக்கிட்டு இருப்பார் மனோஜை இன்னும் மட்டும் தட்டி பேசுவாரு என்று சொல்லுகிறார்.

அதற்கு முத்து இவ்வளவு நாளா நாங்க தேடி அலைஞ்சோம் இப்ப நீங்க கண்டுபிடிச்சு இருக்கீங்க ன்னு சொன்னா என்ன அர்த்தம் என்று கேட்க உங்க வேலைக்கு டிஸ்டர்ப் ஆக வேணாம்னு தான் சொல்றோம் நான் பாத்துக்குறேன் என்று சொல்லுகிறார் உடனே முத்து ஆனா ஒரு கண்டிஷன் பணத்தை கண்டுபிடித்ததும் அப்பா கிட்ட தான் எடுத்து வந்து கொடுக்கணும் இதுக்கு முன்னாடி ஏமாத்துன மாதிரி செஞ்சீங்கன்னா அவ்வளவு தான் என்று சொல்ல அண்ணாமலையும் பணத்தை எடுத்துட்டு வந்து என் கைல குடுக்கணும் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

மறுபக்கம் மீனா கிச்சனில் பாத்திரம் கழுவிக் கொண்டிருக்க முத்து வந்து இன்னைக்கு எல்லாம் வேலை செஞ்சுட்டு இதையும் பண்ணிட்டு நீ எப்ப தூங்குவ என்று கேட்க அதெல்லாம் பண்ணிக்கலாம் என்று சொல்லிவிட்டு ரோகினி ஏங்க இப்படி சொன்னாங்க இவ்வளவு தூரம் கண்டுபிடிச்சோம் இப்ப வந்து உங்க வேலைய பாத்துக்கோங்கன்னு சொல்றாங்க என்று சொல்ல அதெல்லாம் இல்ல அது ஏதோ புதுசா ஒரு திட்டம் போட்டுக்கிட்டு இருக்கு என்று சொல்லுகிறார். சரி நம்மளுக்கு ஒன்னும் இல்ல அப்பா சொன்னார் என்பதற்காக தான் நான் தேடினேன் இல்லன்னா நான் தேடி இருக்க மாட்டேன் எப்ப நான் போகட்டும் என்று சொல்லுகிறார். மறுபக்கம் மீனா பூ கட்டி கொண்டிருக்க அங்கு வந்த முத்து டெக்கரேஷன் விஷயம் பற்றி கேட்க புதுசா இந்த வாட்டி ஏதாவது டிஃபரண்டா பண்ணனும் லாபத்தை எதிர்பார்த்து பண்ண கூடாது அவங்களுக்கு நம்மளோட டெக்கரேஷன் புடிக்கிற மாதிரி பண்ணனும் என்று சொல்ல சூப்பர் மீனா நல்ல ஐடியா என்று பேசிக்கொண்டு இருக்க இருந்தாலும் நீ அந்த லேடி கிட்ட கொஞ்சம் உஷாரா இரு என்று சொல்லுகிறார். யார சொல்றீங்க சிந்தாமணி அம்மாவா என்று மீனா கேட்கிறார்.

ஆமா என்று சொல்ல நானும் மண்டபத்துக்கு போனப்போ அங்க வேலை செய்றவங்க ரொம்ப மோசமான பொம்பளைன்னு தான் சொன்னாங்க இருந்தாலும் நான் பயப்பட மாட்டேன் எனக்கு தான் ஆள் இருக்கே என்று சொல்லுகிறார் என் ஆளுக்கு ஒரு போன் போட்டனா வந்து நின்னுட்டு வாரு என்று சொல்ல யார் அந்த ஆளு எனக்கு தெரியாம இன்று முத்து கேட்க மீனா குலு கொடுக்கிறார். ரஜினிகாந்த் பாட்டில் வரும் என்று சொல்ல எந்த பாட்டு என்று தெரியாமல் முழிக்கிறார் பிறகு பாடலின் மியூசிக் பாடி காட்டு என்று சொல்ல வாயில் முத்து மணி மாலை பாட்டை மீனா பாடுகிறார் உடனே முத்துவும் அதே மாதிரி செய்ய முத்து மணி மாலை பாட்டு தானே என்று சொல்லுகிறார். அந்தப் பாட்டுல யார் பேரு என்று கேட்க இன்னுமா புரியல அந்த பாட்டுல முதல் வரி என்ன என்று சொல்ல முத்து என்பதை அறிந்து சந்தோஷப்படுகிறார். இருவரும் அந்தப் பாடலை மாறி மாறி ரொமான்ஸ் செய்து பூவை மீனாவிற்கு வைத்துவிட அந்த நேரம் பார்த்து முத்துவிற்கு ஃபோன் வருகிறது. வெளிநாட்டிலிருந்து சவாரி வருவதாகவும் மூணு நாள் சென்னை சுத்தி பாப்பாங்க நல்ல காசு நிக்கும் என்று மீனாவிடம் சொல்லுகிறார். எனக்கும் ஆர்டர் கிடைச்சிருக்கு உங்களுக்கு சவாரி வருது நல்ல விஷயங்களை என்று பேசிக்கொள்கின்றனர்.

மறுபக்கம் வித்யாவை வீட்டில் வந்து சந்தித்த முருகன் வண்டி சாவியை கொடுத்து உங்க வண்டியை சரி பண்ணிட்டாங்க பெட்ரோல் ஃபுல்லா போட்டு இருக்க மீதி இருந்த பிரச்சனையும் சரி பண்ணி இருக்கேன் வாட்டர் வாஷ் பண்ணி இருக்கேன் வந்து செக் பண்ணிக்கோங்க என்று சொல்ல அதெல்லாம் வேணாங்க காசு எடுத்துட்டு வரேன் என்று சொல்லுகிறார். காசெல்லாம் வேணாங்க காசு கொடுத்தா தான் நான் தப்பா நினைச்சுப்பேன் என்று சொல்ல இந்த காலத்துல காசு கொடுத்தா தப்பா எடுத்து பண்ண சொல்றீங்க என்று கேட்க, உங்க பேர் என்ன என்று கேட்க முருகன் என்று சொல்லுகிறார் பிரண்ட்ஸ் எல்லாரும் முறுக்ஸ் என்று கூப்பிடுவாங்க என்று சொல்ல அவர் சென்று விடுகிறார். பிறகு வித்யா ரூமுக்குள் வந்து முறுக்ஸ் என சொல்லி சிரிக்கிறார். உடனே ரோகினி வந்து கூப்பிட சொல்லுங்க முருக்ஸ் என்று சொல்ல முறுக்க யாரு என்று கேட்கிறார். அது எல்லாம் ஒன்னும் இல்ல சரி வா உட்காரு என்ன விஷயம் என்று கேட்க பணம் திருடிட்டு போனவன பத்தி ஒரு குலு கிடைச்சிருக்கு என்று முத்து,மீனா சொன்னதை சொல்லுகிறார். அவங்களையே கண்டுபிடிக்க சொல்லி இருக்கலாம் என்று சொல்ல அவங்க கண்டுபிடிச்சா பணம் அவங்க கைக்கு போயிடும். எங்களுக்கு இப்போ தேவைப்படுது அதனால நாங்க தான் கண்டுபிடிக்கணும் என்று சொல்லி இப்ப என்ன பண்ண போற என்று கேட்கிறார் சிட்டி கிட்ட தான் சொல்லப் போறேன் என்று சொல்லி சிட்யை பார்க்க காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சிட்டியிடம் ரோகிணி என்ன சொல்லுகிறார்?அதற்கு சிட்டியின் பதில் என்ன? முத்துவிற்கு வரும் மலேசியா சவாரியில் என்ன சொல்லுகிறார்கள்?என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial episode update 10-01-25
siragadikka asai serial episode update 10-01-25