கேவலப் பாட்டுக்காக வெட்கப்படுகிறேன்: ஷ்ரேயா கோஷல் வருத்தத்திற்கு, நெட்டிசன்ஸ் கேள்வி
இழிவான பாட்டு பாடியதற்காக வருத்தம் தெரிவித்த பாடகி ஷ்ரேயாவுக்கு, நெட்டிசன்ஸ் தெரிவித்துள்ள கருத்து வைரலாகி வருகிறது. இது பற்றிப் பார்ப்போம்..
இந்திய அளவில் புகழ்பெற்ற பாடகியான ஷ்ரேயா கோஷல், தமிழ் சினிமாவில் நினைத்து நினைத்து பார்த்தேன், இளங்காத்து வீசுதே, முன்பே வா என் அன்பே வா’ என பல பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இந்நிலையில், பாலிவுட்டில் ஒரு “ஹாட்” பாடலை பாடியதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார். அது தற்போது விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.
இந்தியில் 2012-ம் ஆண்டு ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘அக்னி பத்’ படத்தில் ‘சிக்கினி சம்மேலி’ என்கிற சாங் செம ஹிட்டானது. அப்பாடலுக்கு நடிகை கத்ரீனா கைஃப் கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார்.
அந்தப் பாடலின் அர்த்தம் என்னவென்றே தெரியாமல் குழந்தைகளும் அதை ரசிக்கின்றனர். அதற்கு நடனமாடுகின்றனர். அந்தப் பாடல் நன்றாக இருக்கிறது என என்னிடமே வந்து கூறும்போது மிகவும் சங்கடமாக இருக்கிறது. 5, 6 வயது குழந்தைகள் கூட இந்த பாடல்களை பாடுகிறார்கள். அது சரியல்ல. அப்பாடலை பாடியதற்காக நான் வெட்கப்படுகிறேன்’ என ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், ‘இதுபோன்ற பாடல்களை ஆண்கள் எழுதுவதால், அவற்றில் பெண்களை இழிவுபடுத்தும்படியான , கேவலமான வரிகள் அதிகம் இருப்பதாகவும், அதுவே ஒரு பெண் எழுதினால் வேறு ஒரு கண்ணோட்டத்தில் எழுதுவார் எனவும் ஷ்ரேயா கோஷல் தெரிவித்துள்ளார். அவரின் இந்த கருத்துக்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
ஏனெனில், அண்மையில் இந்தியில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது அவர் இப்பாடலை மிகவும் ரசித்து பாடியதாகவும் குறிப்பிட்டு அந்த காணொளியை வைரலாக்கி வருகின்றனர்.
இவ்வளவு விவரமாக இருக்கும் ஷ்ரேயாவே, கரெக்டாக சம்பளத்தை எண்ணத் தெரிந்த குயிலே, முதலிலேயே தான் பாடும் பாட்டின் அர்த்தம் என்ன என்பது புரியாமல் போனது ஏனென்று எங்களுக்கு புரியவில்லை’ என்ற நெட்டிசன்ஸ் கருத்து வைரலாகி வருகிறது.