தற்கொலைக்கு முயன்ற பாடகி கல்பனாவுக்கு, தீவிர சிகிச்சை..
ஆபத்தான நிலையில் பாடகி கல்பனாவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது பற்றிய தகவல்கள்…
மறைந்த இசையமைப்பாளர் ராகவேந்தர் ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் ரேவதியின் அப்பாவாக நடித்தவர் ஆவார். இவரது மகள்தான் கல்பனா.
ராகவேந்தருக்கு உறுதுணையாக கல்பனா இருந்து வந்தார். உடல் நலக்குறைவால் அவர் 2020-ல் உயிரிழந்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என 500-க்கும் மேற்பட்ட பாடல்களை கல்பனா பாடியுள்ளார். தமிழில் குறிப்பாக கடவுள் தந்த அழகிய வாழ்வு, ‘காத்தாடிபோல ஏண்டி என்னைச் சுத்துறே,
போன்ற பாடல்களை பாடியுள்ளார். ராஜ்கிரண் நடித்த ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் வரும் ‘போடா போடா புண்ணாக்கு’ பாடல் இவருக்கு பெரிய அடையாளத்தை கொடுத்தது.
பின்னர், கல்யாண வாழ்க்கை சோகத்தில் முடிந்தாலும், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்துள்ளார். இளையராஜா இசை நிகழ்ச்சிகளில் பல பாடல்களை கல்பனா பாடியுள்ளார்.
ஹைதராபாத்தில் இருந்த அவர், தனது இல்லத்தில் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. வீட்டில் சுயநினைவின்றி கிடந்த அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இவர் தற்கொலைக்கு முயன்ற செய்தி சினிமா திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது., மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
