
ஐபிஎஸ் அதிகாரியின் மகள்- நடிகை ரன்யா 15 கிலோ தங்கம் கடத்தல்; போலீஸ் விசாரணை..
ஐபிஎஸ் அதிகாரியின் மகள்-நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தலில் கைது செய்யப்பட்டுள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்..
கன்னட நடிகர் சுதீப்புக்கு ஜோடியாக ‘மாணிக்யா’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ரன்யா ராவ். இவர், கர்நாடகாவில் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரியின் மகள் என்பதால், அந்த செல்வாக்கை பயன்படுத்தி விமான நிலைய பாதுகாவலர்களையும் மீறி தங்கத்தை கடத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.
திங்கள்கிழமை இரவு துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் பெங்களூரு வந்த நடிகை ரன்யா, இவர் அடிக்கடி வெளிநாட்டுக்கு பயணம் செய்து வந்ததால், டிஆர்ஐ கண்காணிப்பில் இருந்தார்.
அவர், தனது ஆடைகளில் தங்கக் கட்டிகளை மறைத்து வைத்தும், கண்ணுக்குத் தெரியாதபடி தங்கத்தை கடத்திச் செல்வதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்ததை அடுத்து, அவரது உடமைகளை பரிசோதனை செய்த போது, அதில் இருந்த 14.8 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
விமான நிலையத்திற்கு வந்தவுடன், ரன்யா டிஜிபியின் மகள் என்று கூறி, உள்ளூர் காவல்துறை அதிகாரிகளை தனது வீட்டிற்கு அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்த அதிகாரிகளுக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா? இல்லை இந்த கடத்தல் அவர்களுக்கு தெரியாமல் நடந்ததா? என டிஆர்ஐ இப்போது விசாரித்து வருகிறது.
மேலும், அவருக்கு சட்ட அமலாக்கப் பணியாளர்களின் ஆதரவு இருந்ததா? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 15 நாட்களில் அவர் நான்கு முறை துபாய் சென்றிருப்பதைக் கவனித்த DRI அவரது நடமாட்டத்தைக் கண்காணிக்கத் தொடங்கியது.
இந்த உளவுத்துறையின் அடிப்படையில், ஏஜென்சி தகவல் வந்ததை அடுத்து ரன்யாவை பரிசோதனை செய்து அவரை கைது செய்து பெங்களூரில் உள்ள டிஆர்ஐ தலைமையகத்திற்கு அழைத்துச் சென்று நடிகை ரன்யா ராவ் நடத்திய பின்னர், அவரை பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
