5 ஆஸ்கர் விருதுகளை வென்ற ‘அனோரா’ திரைப்படம்; ஓடிடி.யில் ரிலீஸ்..
ஆஸ்கர் விருதுகளை அள்ளிய திரைப்படம் ஒடிடி.யில் வெளியாகிறது. இது பற்றிய விவரம் பார்ப்போம்..
சினிமா உலகில் உயரிய விருதான ஆஸ்கர் விருதினை பெறுவதே திரைப்பட கலைஞர்களின் கனவாக உள்ளது. இந்த ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் லாஸ் ஏஞ்சல்ஸில் விழா நடைபெறுகிறது.
அவ்வகையில் நடைபெற்ற விழாவில், ‘அனோரா’ திரைப்படம் 5 விருதுகளை பெற்றது. அதாவது சிறந்த திரைப்படம் , இயக்குநர், நடிகை, படத்தொகுப்பு, திரைக்கதை என 5 ஆஸ்கர் விருதுகளை வென்றது.
இந்நிலையில் 5 ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் குவித்த ‘அனோரா’ திரைப்படம் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இப்படம் வருகிற 17-ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது. இப்படம், பாலியல் தொழிலில் ஈடுபடும் ஒரு பெண்ணுக்கும், பணபலம் படைத்த தொழிலதிபரின் மகனுக்குமான உணர்வியலை பேசுகிறது.
