சிங்கப்பூர் சலூன் மற்றும் ப்ளூ ஸ்டார் ஆகிய படங்களின் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. 

Singapore Saloon Vs Blue Star Movie Collection Report : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். இந்த வருட பொங்கலுக்கு அயலான், கேப்டன் மில்லர் ஆகிய திரைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து கடந்த வாரம் எந்த ஒரு தமிழ் படமும் வெளியாகவில்லை. 

இப்படியான நிலையில் நேற்று ஆர் ஜே பாலாஜி நடிப்பில் சிங்கப்பூர் சலூன் என்ற திரைப்படமும் பா ரஞ்சித் தயாரிப்பில் அவருடைய நண்பர் ஜெயக்குமார் இயக்கத்தில் ப்ளூ ஸ்டார் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் சாந்தனு நடித்திருந்தார். 

சிங்கப்பூர் சலூன் திரைப்படம் முதல் நாளில் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் ப்ளூ ஸ்டார் திரைப்படம் 60 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் இரண்டு படங்களின் வசூலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.