விஜய் மீது, சத்யராஜின் மகள் திவ்யா விமர்சனம்: ரசிகர்கள் பதிலடி
சத்யராஜின் மகள் விஜய்யை விமர்சனம் செய்ததற்கு, விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்திருப்பது பற்றிப் பார்ப்போம்..
நடிகர் சத்யராஜ்க்கு சிபிராஜ் என்கிற மகனும், திவ்யா என்கிற மகளும் உள்ளனர். திவ்யா திமுக.வில் இணைந்த பிறகு, கட்சியில் பொறுப்பும் வழங்கப்பட்டது.
அவ்வகையில், திவ்யா பேசும்போது, ‘உதயநிதி ஸ்டாலின் சார், ஏசி கேரவனில் உட்கார்ந்து கொண்டு, சொகுசு விமானத்தில் ‘பிரெண்டு’ கூட ‘பிரெண்டு’ திருமணத்துக்கு போகும் ஒரு போலி அரசியல்வாதி கிடையாது. அவர் ஒரு கடின உழைப்பாளி. மழை வந்தாலும் வெள்ளம் வந்தாலும் நமக்காக இறங்கி வேலை செய்வார்.
பாஜக அரசிடம் இருந்து தமிழ்நாட்டை காக்க வந்த மாமன்னன் தான் உதயநிதி. அவரை எதிர்த்து யார் நின்றாலும், டெபாஸிட் போயிடும். அவர் ஒரு வீழ்த்த முடியாத ஹீரோ. இன்று ஒரு பெண்ணாக இங்கு நின்று பேசுகிறேன் என்றால், அந்த தைரியம் எனக்குள் வந்ததற்கு காரணம் கலைஞர் ஐயா தான். அப்பா காசில் வாழாமல், சுயமாக சம்பாதிக்க வேண்டும் என்ற தைரியம் வந்ததற்கும் கலைஞர் தான் காரணம்’ என்றார்.
இதற்கு விஜய்யின் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். தவெக தொண்டர்கள், மலை எங்கே, மடு எங்கே’ எனவும், இப்படியா விளம்பரம் தேடுவது? எனவும், இந்த மாதிரி கந்தலாடைகளுக்கு பதில் சொல்லி நேரத்தை வீண்டிக்காதீர்கள்’ எனவும் பதிவிடுவது வைரலாகி வருகிறது.