குஷ்பூவின் மகள் அவந்திகா, ஹீரோயினியாக அறிமுகம்: இயக்குனர் யார்?

சினிமாவில் கதாநாயகியாக அவந்திகா அறிமுகமாக உள்ளார். இது பற்றிய தகவல் பார்ப்போம்..

சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘முறைமாமன்’ படத்தில் குஷ்பூ நடித்தபோது இருவரும் காதலித்து, திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு அவந்திகா, அனந்திகா என 2 மகள்கள் உள்ளனர்.

அவர்களில் அனந்திகா ‘தக் லைஃப்’ படத்தில் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிகிறார். இன்னொரு மகள் அவந்திகாவுக்கு நடிப்பதில் ஆர்வம் இருப்பதாக தகவல்கள் பரவிக் கொண்டிருந்தன.

இந்நிலையில், அவந்திகா தெரிவிக்கையில், ‘நான் சினிமாவுக்கு வந்தால் கண்டிப்பாக அம்மாவுடன் என்னை ஒப்பிடத்தான் செய்வார்கள். ஆனால், அம்மா மாதிரி உழைப்பு, தீவிரம், நடிப்பை சீரியஸாக எடுத்துக்கொள்வது போன்றவை எல்லாம் எனக்கும் அமைய வேண்டும். அதெல்லாம் பெரிய விஷயம்.

அம்மாவைப் போல் வருவது கடினம். இருந்தாலும் அதற்கான முயற்சியையும், பயிற்சியையும் எடுக்க வேண்டும். அவங்க மிகப்பெரிய ஆர்ட்டிஸ்ட்’ என்றார்.

இவ்வகையில், அவந்திகா சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமாக இருக்கிறார். அப்பா சுந்தர்.சி இயக்கத்திலா? அல்லது வேறு இயக்குனரின் படத்திலா? என்பது பொட்டு அம்மன்-2 திரைப்படம் ரிலீஸானதும் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, கே.பாக்யராஜ் இயக்கத்தில் அவரது மகள் சரண்யா ‘பாரிஜாதம்’ என்ற படத்தில் மட்டும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

sundar c and kushboo daughter heroine entry