நடிகர் ஸ்ரீ-யின் நிலைமை நலமாக மாறும்: இயக்குனர் லோகேஷ் நம்பிக்கை

நடிகர் ஸ்ரீ-க்கு என்ன ஆயிற்று? என்ற கேள்விகள் வருத்தங்களுடன் இணையத்தில் பரவி வருகிறது. இது பற்றிய தகவல்கள்..

பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘வழக்கு எண் 18/9’ என்ற படத்தில் அறிமுகமானார் நடிகர் ஸ்ரீ. இதனைத் தொடர்ந்து, மிஷ்கின் இயக்கத்தில் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ சோன் பப்டி, வில் அம்பு
மாநகரம், இறுகப்பற்று போன்ற படங்களிலும் நடித்தார்.

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, ‘போன் இல்லாமல் இருக்க முடியாது’ என 4 நாட்களிலேயே வெளியேறினார்.

ஸ்ரீ நடித்த ‘இறுகப்பற்று’ படம் கடந்த ஆண்டு வெளியானது, அந்த படத்தின் வெற்றிவிழா நிகழ்ச்சியில் ஸ்ரீ கலந்து கொள்ளவில்லை. ஸ்ரீ என்ன ஆனார்? என தெரியாமல் இருந்த, நிலையில், அவர் எலும்பும் தோலுமாக அடையாளமே தெரியாத அளவில் இருக்கும் போட்டோ மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியானது. இதைப்பார்த்த, இணையவாசிகள்
அதிர்ச்சி அடைந்தனர்.

தலைக்கு கலரிங் அடித்துக்கொண்டும், நிர்வாணமாகவும் சில வீடியோவில் இருக்கிறார். இதைப்பார்க்கும் போது, அவர் மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் ‘ஸ்ரீ தனிமையில் இருப்பது போல இருக்கிறது. அவர் மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார். உரிய கவுன்சிலிங் கொடுத்தால், நிச்சயம் சரியாகிவிடும்’ என தெரிவித்து வருகின்றனர்.

இதனைக் கேள்விப்பட்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ‘தனது உதவியாளர்களிடம் ‘மச்சானுக்கு என்னடா ஆச்சு.? தற்போது ஸ்ரீ எங்கே இருக்கிறார்? என விசாரிக்க சொல்லியிருப்பதால், ஸ்ரீ-யின் நிலைமை நிச்சயம் நலமாக மாறும்’ என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

maanagaram movie actor sri current condition