ஏ.ஆர்.ரகுமான், யுவன், ஹாரிஸ் சாதனையை சாய் அபயங்கர் முறியடித்தாரா?
இசைத்துறையில் சாதனை என்பது, மக்களை வசீகரித்த அவரவர் இசையால் தீர்மானிக்கப்படுகிறது எனவும் குறிப்பிடலாம். அவ்வகையில், பாடகர்களான திப்பு-ஹரிணியின் மகன் சாய் அபயங்கரின் இசைப்பயணம் பற்றிப் பார்ப்போம்..
சாய் அபயங்கர் இசையில் இதுவரை ஒரு படம் கூட ரிலீஸ் ஆகவில்லை. ஆனாலும், இவரது சில சுயாதீன இசைப் பாடல்கள், மில்லியன் கணக்கில் வியூவர்சை பெற்றுள்ளன. திறமை இருந்தால் போதும், வயது தடையல்ல என்பதை சாய் நிரூபித்துள்ளார், 20 வயதான சாய்.
இந்நிலையில், அட்லீ மற்றும் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு சாய் இசையமைக்க உள்ளார்.
முன்னதாக, லோகேஷ் கனகராஜ் கதை எழுதிய ‘பென்ஸ்’ படத்திற்கும், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கும் இசையமைக்கிறார்.
ஏ.ஆர்.ரகுமான், யுவன் ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற இசை அமைப்பாளர்கள் சுமார் 27 வயதில் பெரிய பட்ஜெட் படங்களில் பணியாற்ற வாய்ப்பு பெற்றனர்.
ஆனால், சாய் 20 வயதிலேயே அல்லு அர்ஜுன்-அட்லீ போன்ற ஸ்டார் கூட்டணியில் வாய்ப்பை பெற்றிருப்பது சாதனையாக சொல்லப்படுகிறது.
அனிருத்திடம், சாய் இசை புரோகிராமராக சிறிது காலம் பணியாற்றி, அவருடன் இணைந்து ‘தேவரா’, ‘கூலி’ போன்ற படங்களுக்கு புரோகிராமராகவும் பணியாற்றி உள்ளார்.
குறிப்பாக, பாரம்பரியமாக அவரது பெற்றோர்களும் பாடகர்கள் என்பதால், சிறுவயதில் இருந்தே இசைத்துறையில் தனது வாழ்க்கையை தொடங்கியதும் முன்னேற்றத்திற்கு படிக்கட்டாக அமைந்துள்ளது.
இச்சூழலில், சாய் இசையமைத்த திரைப்படம் ஒன்றுகூட வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.