சர்தார் 2 திரை விமர்சனம்

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் திரைப்படம் ‘சர்தார் 2’. உடன் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2022ஆம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ படத்தின் தொடர்ச்சியாக உருவாகியிருக்கும் இப்படம், முதல் பாகத்தைவிட பெரிய களத்தையும் சர்வதேச பின்னணியையும் கொண்ட கதையாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
விஜய் பிரகாஷ் என்கிற விஜி (கார்த்தி)…. சர்வதேச உளவு உலகத்துக்குள் செல்கிறார். துவக்கத்திலேயே ஒரு வித்தியாசமான கத்தியை தேடி ஒரு குழு ஏஜெண்ட் வால்ரஸ் (அச்யூத் குமார்) என்பவரை துரத்துகிறது. பிறகு தான் தெரிகிறது அது கத்தியல்ல ஒரு குறிப்பிட்ட பொருளை திறக்கும் சாவி என்பது. மேலும் இதே போல் இன்னும் இரண்டு விதமான சாவிகள் இருப்பதும் தெரிய வருகிறது. இந்த சாவி எதற்கு எதை திறப்பதற்காக உருவாக்கப்பட்டது ஏன் இதனை இத்தனை பேர் தேடுகிறார்கள் என்பது மீதி கதை.
வழக்கம் போலவே அப்பா மகன் என டபுள் ஆக்ஷன் கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறார் கார்த்தி. அவருக்கு அடுத்தபடியாக கதையில் இன்னொரு பலமாக தெரிகிறார் எஸ் ஜே சூர்யா. ஒரு சில காட்சிகளில் அவரது நடிப்பு ஓவர் டோஸ் போல இருந்தாலும், அதுதான் பார்வையாளர்களை எங்கேஜ் செய்கிற தருணமாக மாறி இருக்கிறது. யோகி பாபு, நிழல்கள் ரவி, நாசர், உள்ளிட்ட சீனியர் நடிகர்களும் அவரவர் பங்கை சரியாக கொடுத்திருக்கிறார்கள். மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் இருவருமே திரையில் அழகாகவும் இருக்கிறார்கள் கதைக்கொள்ளும் நிறைய பயன்படுத்துகிறார்கள். ஸ்பை கதாபாத்திரத்திற்கு மாளவிகா மோகனன் கச்சிதமாக பொருந்துகிறார். ரதிஷா விஜயன் வழக்கம் போலவே ஃபிளாஷ்பேக் கண்மணியாக மனதைக் கவர்கிறார்.
முதல் பாகத்தைப் போலவே, இந்தப் படத்திலும் சமூகத்தை பாதிக்கும் ஒரு சமகாலப் பிரச்சினையை கதையின் மையமாக வைத்திருக்கிறார் இயக்குநர். இந்த முறை ஆன்டிபயாட்டிக் மருந்துகளின் பயன்பாடு மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து படம் பேசுகிறது. கருத்து சுவாரஸ்யமாக இருந்தாலும், அதைச் சொல்லும் விதத்தில்தான் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. மிகவும் காமெடியாக சலிப்பு ஏற்படுத்தும் ஒரு இடத்தில் அதை சொன்ன விதம்தான் நெருடுகிறது.
கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடும் படத்தில், குறிப்பாக இரண்டாம் பாதியில் கதை தேவைக்கு அதிகமாக நீள்கிறது. ‘உயிருக்கு ஆபத்து, சதித்திட்டம் எவ்வளவு பெரியது, ஆன்டிபயாட்டிக்கின் தாக்கம் என்ன என்பது போன்ற விஷயங்கள் நீண்ட வசனங்கள் மற்றும் காட்சிகள் மூலம் மீண்டும் மீண்டும் விளக்கப்படுகின்றன.

உலகையே காப்பாற்ற வேண்டிய ஒரு பெரிய ஆபத்து இருந்தாலும், அதைத் தடுக்க வேண்டும் என்ற பதற்றம் பார்வையாளர்களுக்குள் போதுமான அளவில் புகுத்தப்படவில்லை.
துவக்கத்தில் இருந்தே திருப்பங்களும் சஸ்பென்ஸ் உள்ளிட்டவை குறைவாக இருக்கின்றன. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை ஓரளவுக்கு முன்கூட்டியே கணிக்க முடிகிறது.
ஆனால் இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் கார்த்தி.
தொழில்நுட்ப ரீதியாக படம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளன. அதேசமயம் இந்தியா மற்றும் ஜப்பான் என பல இடங்களுக்கு பயணிக்கும் கதை நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்த வேண்டும் அதில் தவறியிருக்கிறது. விஷுவலாக ட்ரீட்டாக இருப்பதற்கு ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு கை கொடுத்திருக்கிறது. ஆனால் விஜய் வேலுக்குட்டி எடிட்டிங் இன்னும் கச்சிதமாக இருந்திருக்கலாம். நீளம் மிக நீளம்.
சாம் சி.எஸ். 100வது படம் என்பதால் பின்னணி இசையில் அவருடைய சிறப்பை கொடுத்திருக்கிறார். குறிப்பாக எஸ். ஜே. சூர்யா வரும் காட்சிகளில் பின்னணி இசை மேஜிக் செய்திருக்கிறார்.
மொத்தத்தில், ‘சர்தார் 2’ … ‘ துரந்தார் ” போன்ற மாபெரும் ஸ்பை ஏஜென்ட் திரைப்படங்கள் இந்திய சினிமாவை ஆட்கொண்டு இருக்கும் தருவாயில் அதை மிஞ்ச முயற்சி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை ஓரளவிற்கு சுவாரசியமான அல்லது பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு ரகசிய உளவாளி திரைப்படத்தை கொடுத்திருக்கலாம். கிட்டத்தட்ட ஜெய்சங்கர் காலத்து ஸ்பை படமாக ஈர்க்க மறுக்கிறது. கார்த்தியின் நடிப்பு மற்றும் மேக்கிங் தரம்.

சர்தார் 2 திரை விமர்சனம்
சர்தார் 2: மேக்கிங் மட்டுமே ஸ்பெஷல் !
- Rating