Samantha Trolled his Follower : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News , Samantha Akkineni

Samantha Trolled his Follower  :

நெட்டிசன் ஒருவர், சின்மயினால் இந்த படம் ஓடாது என கூறியுள்ளார். இதற்கு சமந்தா, உலகமே இந்த முட்டாளை பாருங்கள் என செம பதிலடி கொடுத்துள்ளார்.

பொதுவா ஒரு நடிகைக்கு கல்யாணம் ஆச்சுனா அவங்களோட கேரியர் அதோட முடிஞ்சிடும்னு சொல்வாங்க.

ஆனா சமந்தா விஷயத்தில இது தலைகீழா நடக்குதுன்னுதான் சொல்லனும். இன்னும் சொல்லப்போனா கல்யாணத்துக்கு அப்புறம்தான் முன்பிருந்தத விடபிஸியான நடிகையா சமந்தா வலம் வர்றாங்க.

அந்தவகையில் கடந்த ஆண்டு மட்டும் இவரது நடிப்பில் வெளியான ரங்கஸ்தளம், மகாநடி ஆகிய இரண்டு தெலுங்கு படங்களும் மெகா வெற்றியை ருசித்தது.

அதேபோல் இந்த ஆண்டு இவருடைய நடிப்பில் தெலுங்கில் வெளியான மஜிலி படமும் நல்ல கமர்ஷியல் வெற்றியை பெற்றது.

இதைத் தொடர்ந்து சமந்தா அவரை பிரதானப்படுத்திய ஓ பேபி படத்தில் நடித்து வருகிறார்.

தெலுங்கில் தயாராகியுள்ள இப்படம் தற்போது தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. இதன் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த தமிழ் பதிப்புக்கு வழக்கமாக சமந்தாவுக்கு டப்பிங் கொடுக்கும் சின்மயி தடையையும் மீறி டப்பிங் கொடுத்துள்ளார்.

இதை குறிவைத்து நெட்டிசன் ஒருவர், சின்மயினால் இந்த படம் ஓடாது என கூறியுள்ளார். இதற்கு சமந்தா, உலகமே இந்த முட்டாளை பாருங்கள் என செம பதிலடி கொடுத்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.