தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி மினிஸ்டர் இடம் உங்க வீட்ல பொண்ணு எடுக்க க்யூல நிக்கிறாங்க அப்படி இருக்கும்போது எங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது ரொம்ப சந்தோஷம் என்று சொல்லுகிறார். எனக்கு ஒரு கண்டிஷன் என்று மினிஸ்டர் சொல்ல, அனைவரின் முகம் மாறுகிறது. ஆனால் அவர் இந்த கல்யாணத்துக்கு நீங்க ஒரு ரூபா கூட செலவு பண்ண கூடாது நான் தான் எல்லாமே பார்த்துப்பேன் என்று சொல்லுகிறார். உடனே சுந்தரவல்லி சிரித்து விட்டு நீங்க குறிச்ச தேதியில் இந்த கல்யாணம் நடக்கும் என்று வாக்கு கொடுக்கிறார். சூர்யாவின் அப்பா சூர்யாவை கேட்டு முடிவெடுக்கலாம் என்று சொல்ல நீங்க வாய மூடிட்டு சும்மா இருங்க என்று சொல்லிவிடுகிறார்.
மறுபக்கம் நந்தினி நடந்து வந்து கொண்டிருக்கும் அந்த நேரம் பார்த்து ஒரு நபர் காலில் வந்து விழுகிறார். நீங்க யாரு என்னவென்று கேட்க நீங்க செய்த உதவியை நான் மறக்க மாட்டேன் என்று சொல்லுகிறார். நான் என்ன பண்ணேன் என்று கேட்க மூட்டைல கட்டி தூக்கிட்டு வந்து கொல்ல பார்த்தாங்க நீங்கதான் காப்பாத்துனீங்க என்று சொல்ல நான் வந்து பார்த்தேன் நீங்க இல்லையே என்று கேட்கிறார். நான் உயிர் பயத்துல அங்க தான் ஒளிஞ்சிருந்தேன் என்று சொல்லுகிறார். அவரது மனைவியை கூப்பிட்டு காலில் விழுந்து கும்பிடுகிறார். அந்த மனைவியின் நபர் தான் நந்தினியை நகை கேஸ்சில் மாட்டி விட்டது. என்னாச்சு அண்ணா எதுக்கு அப்படி பண்ணாங்க என்று கேட்க அது ஒரு பண விஷயமா என்று சொல்லுகிறார். பிறகு இனிமேல் உஷாரா இருந்துக்கோங்க என்று சொல்லிவிட்டு நந்தினி கிளம்புகிறார்.
மறுபக்கம் தண்டோரா போட்டு சுதாகர் பஞ்சாயத்தை கூட்டி இருப்பதாகவும் நந்தினி மீது பிராது கொடுத்திருப்பதாகவும் வந்து சொல்லிவிட்டு போகிறார். குடும்பத்தினர் அனைவரும் என்ன நடக்கப் போகிறது என்று பதற்றத்தில் இருக்க மறுநாள் பஞ்சாயத்து கூடுகிறது.
பஞ்சாயத்தில் சுதாகர் மற்றும் நந்தினி குடும்பத்தினர் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொள்ள பிராது கொடுத்த சுதாகரிடம் என்ன காரணம் என்று பஞ்சாயத்து நபர்கள் கேட்கின்றனர். அதற்கு பஸ்ல இருக்குறவங்க கிட்ட நகையை திருடி ஏமாத்திருப்பதாக நந்தினி மீது குற்றம் சாட்டுகிறார். இந்த மாதிரி திருடி நம்ம ஊருக்குள்ள இருந்தா நம்ம ஊருக்குத்தான் கெட்ட பேரு.நாளைக்கு யார் பொண்ணு கொடுப்பாங்க பொண்ணு எடுப்பாங்க இந்த ஊர்ல இருந்து இந்த ஊரோட நல்லதுக்கு தான் இவங்க குடும்பம் இந்த ஊர்ல இருக்கக்கூடாதுன்னு நான் சொல்றேன் என்று சொல்லுகிறார்.
நந்தினி எதுவும் பேசாமல் நிற்க, அந்த நேரம் பார்த்து நகையை திருடி நந்தினி பேகில் போட்ட பெண் வருகிறார். அவரைப் பார்த்து சுதாகர் அதிர்ச்சி அடைகிறார். அந்தப் பெண் வந்து நந்தினிக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இங்க இருக்கிற சுதாகர் இன்னொரு இன்ஸ்பெக்டரும் சேர்ந்து நகையை திருடி இந்த பொண்ணோட பேக்ல போட சொன்னாங்க மத்தபடி இந்த பொண்ணு ஒரு அப்பாவி இந்த பொண்ணு எந்த நகையும் திருடல நான் இதை எங்க வேணாலும் வந்து சத்தியம் பண்ணுகிறேன் என்று பேசுகிறார். இதனால் சபையின் முன் சுதாகர் அசிங்கப்பட்டு உட்கார்ந்திருக்கிறார். பஞ்சாயத்தில் இருந்த நபர்கள் நந்தினியிடம் மன்னிப்பு கேட்க, நந்தினி பரவாயில்லையா இவர் எனக்கு நல்லது தான் பண்ணி இருக்காரு இல்லன்னா நான் திருட்டு பட்டத்தோட தான் இருந்திருப்பேன் என்று சொல்லுகிறார். இப்போ எல்லாருக்கும் தெரிந்திருக்கும் நான் எந்த தப்பும் பண்ணல என்று சொல்லுகிறார்.
மேலும் பஞ்சாயத்தில் இருக்கும் நபர்கள் மூணு பொண்ணுங்க இருக்குற வீட்ல இது மாதிரி பழிய போட்டு அசிங்கப்படுத்தறியே இது உனக்கே நல்லா இருக்கா என்று கேட்க,இது மட்டும் இல்லாமல் நந்தினி நாங்க உங்களுக்கு என்ன பண்ணோம் சாதாரண குடும்பத்தில் இருக்கிற எங்கள பார்த்து ஏன் பழி வாங்கணும்னு நினைக்கிறீங்க, இனிமே இப்படி பண்ணாதீங்க என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.பஞ்சாயத்து கலைய, ஒரு நபர்,என்னோட பங்காளி என்று சொல்லிக்கவே அசிங்கமா இருக்கு ஏன் இப்படி பண்ணை என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
சூர்யாவின் திருமண பத்திரிக்கை வீட்டுக்கு வர சுந்தரவல்லி குலதெய்வ கோயிலுக்கு போயிட்டு வந்து எல்லாமே இவ்ளோ சீக்கிரம் நடக்கும் என்று எதிர்பார்க்கலை என்று சந்தோஷமாக பேசுகிறார்.
அந்த நேரம் பார்த்து சூர்யா வர சுந்தரவல்லி அருணாச்சலத்திடம் சொல்லி சூர்யாவை வந்து பத்திரிக்கை பார்க்க சொல்லுங்க நான் கூப்பிட்டா வரமாட்டான் என்று சொல்லுகிறார். பத்திரிக்கையை பார்த்து டென்ஷனான சூர்யா யாரைக் கேட்டு இதெல்லாம் பண்றீங்க குழந்தையை ஏமாத்தி பண்ற மாதிரி கிராமத்துக்கு கோயிலுக்கு கூட்டிட்டு போனீங்க, அப்புறம் மீட்டிங்ன்னு சொல்லி மினிஸ்டர் வீட்டுக்கு கூட்டிட்டு போனீங்க எனக்கு எதுவுமே தெரியாது என்று நினைத்து இப்படி பண்றீங்களே என்று கோபப்படுகிறார். எல்லா ஏற்பாடும் நீங்க பண்ணலாம் ஆனா தாலி கட்ட போறது நான்தானே நான் வரலைன்னா என்ன பண்ணுவீங்க இப்பவே ஃபாரின்ல போய் செட்டில் ஆனா என்ன பண்ணுவீங்க என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். நான் குடிக்காம தான் பேசுறேன் இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க அப்படி இல்ல அப்படின்னா எல்லாரும் அசிங்கப்படுவதற்கு ரெடி ஆயிடுவேன் என்று சொல்லிவிட்டு நடக்காத கல்யாணத்திற்கு பத்திரிக்கை வேற என்ன சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
பிறகு சூர்யாவின் அப்பா நான் தான் சொன்னேன்ல என்று சொல்ல இப்ப என்ன கல்யாணத்தை நிறுத்த சொல்றீங்களா என்று சுந்தரவல்லி கேட்க அது இல்லை என்று அருணாச்சலம் பேச வர, கண்டிப்பா இந்த கல்யாணம் நடக்கும் சூர்யா அர்ச்சனா கழுத்துல தாலி கட்டுவான் அது எப்படி பண்ணனும்னு இந்த சுந்தரவல்லிக்கு தெரியும் என்று பேசுகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா இங்க கல்யாண வேலை வேற பரபரப்பாக நடந்து கிட்டு இருக்கு, இந்த அர்ச்சனா வேற கல்யாணம் பண்ணா என்னதான் பண்ணுவேன்னு சொல்றா என்று யோசிக்கிறார்.
அர்ச்சனா சூர்யாவிடம் ஒரு நாள் வாழ்ந்தால் கூட உன் கூட தான் வாழனும் என்று சொல்லுகிறார். இந்த கல்யாணத்தை நிறுத்த எனக்கு கிடைத்த ஒரே வழி என் வருங்கால மாமனார் தான்.
நான் பண்ண போற வேலையில அவரே நான் சரியானவன் இல்லை இந்த கல்யாணம் நடக்காது என்று சொல்லப் போகிறார் சொல்ல வைக்கிறேன் என்று முடிவு எடுக்கிறார் சூர்யா. என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்