SiragadikkaAasai Serial Today Episode Update
SiragadikkaAasai Serial Today Episode Update

முத்துவின் போனை எடுத்து வீடியோவை தேடுகிறார் ரோகிணி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் முத்து மீனாவின் மடியில் படுத்து கொண்டு இருவரும் பேசிக் கொள்கின்றன. மறுநாள் காலையில் ரோகினி இவ்ளோ பெரிய விஷயத்தை மறைத்து இருக்காங்க, இந்த வீடியோவை மட்டும் லீக் பண்ணிட்டா பிஏ விஷயத்தை சிட்டி பார்த்துப்பான் இவங்க கிருஷ் தத்து எடுக்க மாட்டாங்க என்று பிளான் போட்டு முத்து போனை எடுக்க முயற்சி செய்கிறார்.

தூங்கிக் கொண்டிருந்த முத்து எழுந்து செல்ல அந்த நேரம் பார்த்து ரோகினி போனை எடுக்க வர உடனே முத்து வந்துவிடுகிறார். குளிக்க சார்ஜ் போட்டுவிட்டு போக உடனே ரூமுக்குள் வேகமாக போன ரோகினி போனை எடுத்தவுடன் முத்து மீனா, மீனா என்ன கூப்பிட ரோகினி உடனே கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொள்கிறார். மீனா வந்து டவல் எடுத்துக் கொடுத்துவிட்டு செல்ல விஜயா வந்திருக்கிறார். விஜயா போவதற்குள் முத்து குளித்துவிட்டு வந்து விடுகிறார். மறுபடியும் மீனாவை கூப்பிட்டு தலைதுவட்ட சொல்லுகிறார்.

கட்டிலுக்கு அடியில் போனை வைத்து ரோகிணி வீடியோவை தேடுகிறார். மனோஜ் ரோகினியை காணவில்லை என்று வீடு முழுக்க தேடி அலைகிறார். முதலில் விஜயாவிடம் 500 ரூபாய் பணம் கேட்க அவர் அப்பாவிடம் கேளு என்று சொல்லுகிறார், அண்ணாமலை வந்தவுடன் அவரிடம் கேட்க அவர் முதலில் 300 ரூபாய் இருக்கு என்று சொல்ல சரி கொடுப்பா என்று கேட்கிறார் பிறகு இல்லை சாயங்காலம்மா தரேன் என்று சொல்லி அவரும் தர மறுக்கிறார். நீங்க யாரும் தர வேணாம் நான் ரோகினி கிட்ட வாங்கிக்கிறேன் என்று மனோஜ் ரோகினி தேடி முத்து ரூமுக்கு வருகிறார். நான் இங்க இருக்கும்போது பார்லர் அம்மா எப்படி டா வரும் என்று திட்டி மனோஜ் அனுப்பி விடுகிறார் முத்து. ரோகினிக்கு வீடியோ கிடைத்துவிட அதை அவரது ஃபோனுக்கு அனுப்புவதற்கு முன் சுவிட்ச் ஆஃப் ஆகிறது. இதனால் கடுப்பான ரோகிணி வெளியே வர முடியாமல் கட்டிலுக்கு அடியிலே இருக்கிறார்.

பிறகு முத்து மீனாவிடம் நீயே எனக்கு ஊட்டி விடு என்று சொல்லி இருவரும் ரொமான்ஸ் ஆக பேசி மாற்றி மாற்றி ஊட்டி விடுகின்றனர். இதை பார்த்த ரோகினி கடுப்பாகிறார்.

முத்து மீனாவிடம் போனை எடுத்துக் கொடு என்று சொல்ல, அங்க போனே இல்லையே என்று சொல்லுகிறார் இல்ல நான் இங்கதான் சார்ஜர் போட்டேன் என்று முத்து சொல்ல நான் போய் வெளியே பார்க்கிறேன் என்று கட்டிலில் செக் பண்ணி பார்க்கிறார் அங்கேயும் போன் இல்லாததால் முத்து வெளியே வந்து பேசிக் கொண்டிருக்கிறார் அந்த நேரம் பார்த்து ரோகினி கட்டிலில் இருந்து வெளியே வந்து போனை வைத்து அது மேல சட்டை வைத்து விட்டு பின் வழியாக வந்து உள்ளே வந்து விடுகிறார். மனோஜ் எங்க போயிருந்த ரோகினி என்று கேட்க மாடி மேல தலையை காய வைத்து கொண்டு இருந்தாய் என்று சொல்லுகிறார்.

மீண்டும் ரூமுக்குள் சென்று தேடிய மீனா போன எடுத்து முத்துவிடம் கொடுக்கிறார். வயசாயிடுச்சு அதனால உங்களுக்கு ஞாபக மறதி வந்துச்சு என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

மறுபக்கம் ரவி சூப்பர் மார்க்கெட்டில் இருக்க அவரது ஓனரான நீத்து வருகிறார். ஹோட்டலுக்காக சில பிளேட்ஸ் எல்லாம் வாங்கணும் புது டிசைன்ல அட்ராக்டிவா இருக்கணும் என்று சொல்லி பிளேட்ஸ் வாங்குகின்றனர். அந்த நேரம் பார்த்து ஸ்ருதியின் அம்மா பார்த்து நிற்கிறார்.

ரவியிடம் ஸ்ருதியின் அம்மா என்ன பேசுகிறார்?அதற்கு ரவி என்ன பதில் சொல்கிறார்? ஸ்ருதியின் அம்மா எடுக்கப் போக முடிவு என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.