சமந்தா வீட்டில் பங்ஷன் ஒன்று நடந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் சமந்தா. இவர் தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா, பானா காத்தாடி, ஈகா ,நீதானே என் பொன்வசந்தம், கத்தி, தெறி போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழியிலும் பல்வேறு படங்களை நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது வெளியிட்ட பதிவில் தனது அண்ணனின் திருமணம் புகைப்படங்கள் மற்றும் குடும்பத்தாரின் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சமந்தாவின் அண்ணனுக்கு திருமண வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த பதிவு வெளியாகிய இணையத்தில் வைரலாகி வருகிறது.