இன்று நயன்தாரா பிறந்த நாளில் சமந்தாவின் விளம்பரப் படம் வைரல்
நயன்தாராவின் பிறந்த நாளான இன்று, சமந்தாவின் பழைய வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. அந்த அழகிய நிகழ்வு பற்றி காண்போம்.
நயன்தாராவின் பிறந்த நாளான இன்று பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மேலும், நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் நயன்தாரா, விக்னேஷ் சிவனின் திருமண ஆவணப்படம் எப்படி இருக்கிறது என வலைதளங்களில் பேசுகிறார்கள்.
இந்த நாளில் யாரும் எதிர்பாராத விதமாக சமந்தாவின் பழைய வீடியோ ஒன்றும் வைரலாகியுள்ளது. விளம்பரப் படத்தில் நடித்த சமந்தாவை பார்த்த அனைவரும் ஆச்சரியப்படுகிறார்கள். அந்த விளம்பர வீடியோவை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,
இது சமந்தா என்றால் அவரே நம்ப மாட்டார். கொஞ்சம் கூட அடையாளம் தெரியவில்லை. இளம் வயதில் இருந்ததற்கும் தற்போது இருப்பதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இது எப்படி சாத்தியம் சமந்தா? இது போன்று விளம்பர படங்களில் எல்லாம் நீங்கள் நடித்தது தெரியாமல் போய்விட்டதே என்கிறார்கள்.
சமந்தா சிகிச்சை மூலம் தன் முகத்தை முழுவதுமாக மாற்றிவிட்டார். போட்டாக்ஸ், ஃபில்லர்ஸ், சர்ஜரியால் தான் சமந்தா தற்போது வேறு மாதிரி இருக்கிறார் என சிலர் தெரிவித்துள்ளனர்.
அதை பார்த்த சமந்தாவின் ரசிகர்களோ, ஒரு பெண் தானாக போராடி முன்னுக்கு வந்தால் உடனே அவரை பிளாஸ்டிக் என சொல்வது தவறு.
சமந்தா தற்போது சந்தோஷமாக இருக்கிறார். அதற்கு காரணம் சிடாடல் வெப்தொடர். ராஜ் மற்றும் டி.கே. இயக்கிய சிடாடல் வெப்தடொரில் ஹனியாக நடித்திருந்தார் சமந்தா.
ஏஜெண்டாக அவர் சண்டை காட்சிகளில் தூள் கிளப்பியிருந்தார். எனக்கு சமந்தாவே பிடிக்காது என்பவர்கள் கூட தன்னை பாராட்டும்படி செய்துவிட்டார்.
சிடாடல் தொடரை பார்க்கும் அனைவரையும் தன்னை பற்றியே பேச வைத்துக் கொண்டிருக்கிறார். மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயுடன் போராடிக் கொண்டே இந்த வெப்தொடரில் நடித்தார் சமந்தா.
தனக்கு மயோசிடிஸ் இருப்பது தெரிந்ததும் ராஜ் மற்றும் டி.கே.விடம் சென்று பிரச்சனையை சொல்லி வேறு ஒரு நடிகையை நடிக்க வைக்குமாறு கூறினார்.
சமந்தாவே சில நடிகைகளின் பெயர்களை பரிந்துரை செய்தார்.
ஆனால், இயக்குநர்களோ அதெல்லாம் முடியாது, நீங்க தான் நடிக்கணும் என சமந்தாவை நடிக்க வைத்தார்கள். ஷூட்டிங்கின்போது சமந்தா திடீரென்று மயக்கம் போட்டு விழுந்ததை பார்த்து, சிடாடல் ஹீரோ வருண் தவான் பதறிவிட்டார்.
தனக்கு பல பிரச்சினை இருந்தபோதிலும் தைரியமாக நடித்து கைதட்டல்களை பெற்றிருக்கிறார் சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வகையில், ரசிகர்களின் மனதில் நிரம்பியிருக்கிறார் சமந்தா.!