புதுமுகங்கள் நடித்த ‘சையாரா’ படம் 400 கோடி வசூல் சாதனை: தயாரிப்பாளர்கள் உற்சாகம்..

Web Ads

பாலிவுட் திரைப்பட இயக்குநர் மோஹித் சூரி இயக்கியுள்ள படம், ‘சையாரா’. காதலை கதைக்களமாக கொண்டு வெளியானது.

யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில், அஹான் பாண்டே ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார். இவர் பிரபல இந்தி நடிகர் சங்கி பாண்டேவின் சகோதரர் மகன். அனீத் பட்டா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் ஜூலை 18-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் வாரத்தில் இந்தியாவில் ரூ.177 கோடி வசூலித்த இப்படம், 12 நாட்களில் ரூ.266 கோடி வசூலித்துள்ளது.

இந்த வார இறுதிக்குள் ரூ. 300 கோடி வசூலைத் தாண்டும் என்கிறார்கள். உலகம் முழுவதும் இப்படம் இதுவரை ரூ.404 கோடியை வசூலித்துள்ளது. இந்த வருடம் வெளியான பாலிவுட் படங்களில் விக்கி கவுஷல் நடித்த ‘ஜாவா’ ரூ.601 கோடியை இந்தியாவில் வசூலித்தது. இதற்கடுத்து ‘சையரா’ படம் அதிகம் வசூலித்து வருகிறது.

அறிமுக ஹீரோ ஒருவரின் படம் இப்படி வசூல் குவித்து வருவது, பாலிவுட் தயாரிப்பாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுமுகம், ஸ்டார் வேல்யூ முக்கியமல்ல, ஸ்கிரிப்ட் வொர்க் தானே முக்கியம்.

saiyaara movie box office collection rupees 400 crores
saiyaara movie box office collection rupees 400 crores