சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படம் பற்றி ஆர்.ஜே.பாலாஜி அப்டேட்ஸ்..

Web Ads

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ‘கருப்பு’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘காட் மோடு’ லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ‘கருப்பு’ படம் குறித்து இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி பேசியுள்ள விஷயம் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. அவர் பகிர்ந்துள்ளதாவது,

‘கருப்பு படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தை பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக தயாரிப்பாளர்கள் கூறினார்கள். நானும் படத்தை பாத்தேன். நன்றாக வந்துள்ளது.

‘கருப்பு’ அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருப்பில் உள்ளனர். டீசர் ரசிகர்கள் இடையில் நல்ல வரவேற்பினை பெற்றது. படமும் அதை போன்றுதான் இருந்தது. இப்படத்தில் முக்கியமான ரோலில் நான் நடித்திருக்கிறேன்’ என கூறினார்.

Web Ad 2

‘காட் மோடு’ லிரிக்கலை விஷ்ணு எடவன் எழுதி, சாய் அபயங்கர் இசையில் வெளியாகியுள்ளது. இந்த பாடல் செம ஃவைப்பாக இருப்பதாக சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அத்துடன் லிரிக்கல் வீடியோவில் இடம்பெற்றுள்ள சூர்யாவின் மிரட்டலான லுக்குகளும் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

இப்படத்தில் திரிஷா ஹீரோயினாக நடித்திருக்கிறார். மேலும் ஸ்வாசிகா, நட்டி நடராஜ், யோகிபாபு, ஷிவிதா, இந்திரன்ஸ், அனகா மாயாரவி உள்பட பலர் இணைந்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம், ஆன்மீகம் கலந்த கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ளது. அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் ‘கருப்பு’ படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

rj balaji confident about suriya starring karuppu movie
rj balaji confident about suriya starring karuppu movie