Web Ads

ரசிகர்களுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் அறிவுறுத்தல்..

துருவ் விக்ரம் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘பைசன் காளமாடன்’ படம் வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தில் பசுபதி, ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

திருநெல்வேலியில் இந்த படம் ஓடும் ஒரு திரையரங்கில் துருவ் விக்ரம், அனுபமா உள்ளிட்ட படக்குழுவினருடன் இயக்குநர் மாரி செல்வராஜ் வந்தார். அப்போது படக்குழு பேசிக் கொண்டிருந்தபோது படம் பார்க்க வந்த ரசிகர்கள் பலரும் ஆடிக் கொண்டும், விசிலடித்தும் ஆரவாரம் செய்து கொண்டிருந்தனர்.

இதனைக் கண்ட மாரி செல்வராஜ் மைக்கில் அவர்களுக்கு கண்டிப்பான முறையில் அறிவுரை வழங்கினார். அப்போது பேசிய அவர் ‘நான் உனக்கு சாராயம் கொடுக்கவில்லை. நான் உனக்கு கொடுத்தது புத்தகம். என்னுடைய சினிமாவை நீ புத்தகமாக படிக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.

உனக்கு சாராயம் கொடுத்து ஆட வைப்பதற்காக நான் இங்கு வரவில்லை. தயவு செய்து சாராயம் குடித்ததைப் போல ஆடாதீர்கள். மகிழ்ச்சியாக இருங்கள். ஒவ்வொரு படம் வரும்போது இந்த மாரி செல்வராஜை உங்கள் சொந்த அண்ணனாக தம்பியாக நினைத்து பார்க்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி’ என தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

director mari selvaraj advice to fans
director mari selvaraj advice to fans