என்னை ஓரங்கட்டி விட்டார்கள்: நடிகை அனுபமா பேச்சு..
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பைசன் காளமாடன்’ படத்தில் துருவ் விக்ரமின் ஜோடியாக நடித்துள்ளார் அனுபமா. இப்படம் தற்போது வரவேற்பு பெற்று வருகிறது.
முன்னதாக, 2015 ஆம் ஆண்டு ‘பிரேமம்’ படத்தின் மூலம் புகழ் பெற்றவர் அனுபமா. அவர் தனது வாழ்க்கையில் சந்தித்த சவால்களைப் பற்றிப் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில்,
‘பிரேமம் படத்திற்குப் பிறகு, டிரோல்களால் மலையாளப் படங்களில் நடிக்கத் தயங்கினேன், பயந்தேன். மலையாள சினிமாவில் பலர் எனக்கு நடிக்கத் தெரியாது என்று சொல்லி என்னை ஓரங்கட்டி விட்டார்கள். 17 வயதில், அது என்னை மனதளவில் பாதித்தது.
ஆனால், தொடர்ந்து கடினமாக உழைத்தேன். கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டேன். இன்று, என்னை பற்றி நினைக்கும்போது, பெருமையாக இருக்கிறது. இப்போது, மலையாளம் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் பணியாற்றி வருகிறேன். எனது நடிப்பு வாழ்க்கை ஒரு புதிய சாப்டருக்குள் நுழைந்திருக்கிறது’ என்றார்.

