ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் ட்ரெண்டிங்காகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னட சினிமாவில் அறிமுகமான இவர் தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம், புஷ்பா உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் அனைவருக்கும் பரீட்சையமானார்.

அதன் பிறகு தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வரவேற்பை பெற்றிருந்த இவர் தற்போது மீண்டும் தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வரும் ராஷ்மிகா கண்ணாடி முன்பு செல்பி எடுக்க முயற்சிக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.