வெற்றி கிடைத்தால் பிறந்த ஊரையே மறந்து விடுவாயா?: ராஷ்மிகாவை டிரோல் செய்யும் நெட்டிசன்கள்
ராஷ்மிகா மந்தனா பேசிய கருத்துகளுக்காக, அதாவது எதிர்மறையான விஷயங்களுக்காக தற்போது டிரோல் செய்யப்படுகிறார். இது பற்றிய விவரம் பார்ப்போம்..
‘சாவா’ பட விளம்பர நிகழ்ச்சியில் ராஷ்மிகா, ‘ தான் ஹைதராபாத்வாசி’ என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசுகையில், நான் ஹைதராபாத் நகரைச் சேர்ந்தவள். இங்கு தனியாக வந்தேன், இப்போது நானும் உங்கள் குடும்பத்தில் ஒருவர் என்று நினைக்கிறேன். நன்றி’ என்று கூறிய வீடியோ கிளிப் தற்போது வைரலாகி வருகிறது.
இதில், தான் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் என்று கூறியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பயணம் தொடர்பாக ஹைதராபாத்தில் இருந்து வந்ததாகக் கூறினாரா? அல்லது தனது சொந்த ஊர் ஹைதராபாத் என்று கூறினாரா? என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஆனால், அவர் பேசிய விதத்தை வைத்துப் பார்க்கும்போது, தனது சொந்த ஊர் ஹைதராபாத் என்று கூறியது போலத் தெரிகிறது.
இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, கன்னட ரசிகர்கள் ராஷ்மிகாவை கடுமையாக டிரோல் செய்து வருகின்றனர்.
விராஜ்பேட், கோடகு மாவட்டம் ஹைதராபாத்தில் உள்ளதா? சொந்த ஊரை மறந்துவிட்டாயா? வெற்றி கிடைத்தால் ஊரையே மாற்றி விடுவார்களா? ராஷ்மிகா எங்கு பிறந்தார் என்பது கூடத் தெரியவில்லையா? என்று கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், உன்னை டிரோல் செய்வது சரியே என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால், இது பெரும் சர்ச்சையாகி உள்ளது.
முன்னதாக, கன்னட மக்களை இழிவாகப் பேசியதற்காக பெரும் சர்ச்சை எழுந்தது. ராஷ்மிகாவும் மன்னிப்பு கேட்டார். இப்போது எப்படி எதிர்வினை ஆற்றுவார் என்பதைப் பார்க்க வேண்டும்.
இந்நிலையில், ராஷ்மிகா தற்போது விஜய் தேவரகொண்டாவை காதலித்து வரும் நிலையில், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.