சினிமா துறையில் சம்பளத்தை பறிப்பதற்கு 2, 3 குரூப் இருக்கிறது: சிவகார்த்திகேயன் குற்றச்சாட்டு
‘சினிமாவில் சம்பளம் கிடைப்பது அரிதான விஷயம்’ என கூறியுள்ளார் சிவகார்த்திகேயன். இது பற்றிய அவரது ஆதங்கம் பார்ப்போம்..
‘அமரன்’ திரைப்பட ரிலீஸுக்கு 6 மாதங்களுக்கு முன்பே தனக்கு சம்பளம் கிடைத்துவிட்டது என கூறியுள்ளார் சிவகார்த்திகேயன்.
மேலும் அவர் தெரிவிக்கையில், ‘சம்பளத்தை சரியாக கொடுத்த கமல் ஹாசனுக்கு நன்றி. சரியாக சம்பளம் கிடைப்பது தமிழ் சினிமாவில் அரிதான விஷயம்.
தன் படங்களின் ரிலீஸுக்கு முந்தைய நாள், அன்பு அண்ணன் அலுவலகத்தில் இருப்பது வழக்கம். சம்பளத்தை சரியாக கொடுக்காமல் இருப்பதோடு மட்டும் அல்லாமல், பாதி சம்பளத்தை வாங்கிக் கொண்டு போயிடுகிறார்கள்.
அப்படி சம்பளத்தில் பாதியை வாங்க, இங்கு 2, 3 குரூப் இருக்கிறது சார்’ என கமலிடம் கூறினார் சிவகார்த்திகேயன். சம்பளத்தில் பாதியை பறித்துக் கொண்டு செல்லும் அந்த குரூப் யாரென்று சொல்லுங்கள் சிவகார்த்திகேயன். நடிகர் சங்கத்தில் புகார் தெரிவியுங்கள். இல்லை என்றால் எங்களிடம் சொல்லுங்கள், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்கிறார்கள் ரசிகர்கள்.
சம்பளத்தை பறித்துக் கொள்கிறார்கள் என கமலிடம் தான் கூறியிருக்கிறார் சிவகார்த்திகேயன். ஆண்டவர் நிச்சயம் ஏதாவது செய்வார். கொஞ்சம் பார்த்துப் பண்ணுங்க கமல் சார்.
பிரபலமாக இருக்கும் சிவகார்த்திகேயனுக்கே இந்த நிலைமை என்றால், வளர்ந்து வரும் ஹீரோக்களின் கதியை நினைத்தால் பயமாக இருக்கிறதே. இப்படி இருந்தால் யார் நடிக்க வருவார்கள் என சினிமா ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தற்போது, சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படம் ரசிகர்களை எதிர்பார்க்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.