மலைக்கா அரோராவுடன், சரக்கு அடித்து விட்டு ராஷ்மிகா மந்தனா குத்தாட்டம்: வைரல் நிகழ்வு..

Web Ads

‘ஜெயிலர்’ படத்தில் தமன்னா ஆடிய ‘காவாலா’ பாடல் ரசிகர்களை ஈர்த்தது. இதனைத் தொடர்ந்து ‘கூலி’ படத்தில் சவுபின் சாகீருடன் இணைந்து பூஜா ஹெக்டே ஆடிய ‘மோனிகா’ பாடலும் கவனத்தை ஈர்த்தது.

முன்னதாக, தனுஷ்-சாய்பல்லவி இணைந்து போட்ட ஆட்டம் ‘ரௌடி பேபி’ பாட்டு வைரலாது நினைவுகூரத்தக்கது.்அவ்வகையில் இதோ பாலிவுட்டில் செம ஸாங்.

தனது கவர்ச்சி நடனத்திற்கு பெயர் பெற்ற மலைக்கா அரோரா, தற்போது ஒரு புதிய பாடலில் தோன்றியுள்ளார். தீபாவளிக்கு வெளியாகவுள்ள இந்தி படமான ‘தம்மா’ வில் இருந்து வெளியாகியுள்ள ‘பாய்சன் பேபி’ என்ற பாடலில் அவர் கிளாமர் மழை பொழிந்துள்ளார்.

வெளியாகி வைரலாகி வரும் இப்பாடலில் மலைக்கா அரோராவுடன், சரக்கு அடித்து விட்டு ராஷ்மிகா மந்தனாவும் நடனமாடி இருக்கிறார். இந்த பாடல் தற்போது ஃபயராக பரவி வருகிறது.

ஆதித்யா சர்போத்தர் இயக்கும் இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், நவாசுதீன் சித்திக் மற்றும் பரேஷ் ராவல் ஆகியோரும் நடித்துள்ளனர். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இப்படம் தீபாவளியை முன்னிட்டு 21-ந்தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

rashmika mandanna and malaika arora set the dance
rashmika mandanna and malaika arora set the dance