ரஞ்சித் சில படங்களை தயாரித்தும் வருகிறார். இதில் ஒரு படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் ஒருவர் இயக்குகிறார்

Ranjith to produce SJ Suryah film :

2012-ம் ஆண்டு எந்தவித ஆர்ப்பாட்டமுமின்றி வெளியாகி மாபெரும் வெற்றியை பதிவு செய்த படம் அட்டகத்தி. இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பா. ரஞ்சித்.

முதல் படத்திலேயே தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படாத தலித் மக்களின் எதார்த்த வாழ்வியலை ஜனரஞ்சக சினிமாவுக்கான மொழியில் பேசி கவனம் ஈர்த்தார்.

6 ஆண்டுகள் நான்கே படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக மாறியிருக்கும் பா. ரஞ்சித் அடுத்ததாக பாலிவுட்டில் கால் தடம் பதிக்க இருக்கிறார்.

பாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான Namah Pictures தயாரிக்கும் அடுத்த படத்தை ரஞ்சித் இயக்கவுள்ளார்.

இன்னும் நடிகர்கள் முடிவாகத நிலையில் இது பழங்குடியினரின் சுதந்திரத்திற்காக போராடிய பிர்சா முன்டாவின் வாழ்க்கை கதையைக் கொண்டு உருவாகும் மெகா பட்ஜெட் படம் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.

தளபதி 63 ரிலீஸுக்கு முன்னர் தயாரிப்பு நிறுவனம் போட்ட மாஸ்டர் பிளான்!

இது ஒருபக்கம் இருக்க ரஞ்சித் சில படங்களை தயாரித்தும் வருகிறார். இதில் ஒரு படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் ஒருவர் இயக்குகிறார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.