Thalapathy 63 producer next with Lakshmi Ramakrishnan : Vijay's third time in Atlee is directed by Kadalani 63 | Nayanthara | Ags Entertainment

நடிகையும் இயக்குநருமான லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள ஹவுஸ் ஓனர் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை தளபதி 63 தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றியுள்ளது

Thalapathy 63 producer next with Lakshmi Ramakrishnan :

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

100- வது வெற்றியை பதிவு செய்து இறுதி போட்டியில் நுழைந்தது சென்னை அணி

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. விஜய்யுடன் அவர்கள் இணையும் முதல் படம் இதுதான்.

இந்நிலையில் இந்த படம் முடிவதற்குள்ளாகவே தங்களுடைய அடுத்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

நடிகையும் இயக்குநருமான லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள ஹவுஸ் ஓனர் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை இந்நிறுவனம் கைப்பற்றியுள்ளதாம். இதுதான் இவர்களின் அடுத்த படம் என்றும் அறிவித்துள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.