நடுக்கடலில் கப்பலில் போஸ் கொடுத்துள்ளார் ரம்யா பாண்டியன்.
தமிழ் சினிமாவில் ஆண் தேவதை, ஜோக்கர் போன்ற படங்களில் நடித்து அறிமுகமான ரம்யா பாண்டியன் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்.
அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வரும் ரம்யா பாண்டியன் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது நடுக்கடலில் கப்பலில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.