தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பில் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் சூர்யாவிடம் உங்க கல்யாணத்துக்காக சாமி கும்பிட வந்த இடத்தில இப்படி நடந்திருச்சு என்று சொல்ல சூர்யாவுக்கு உண்மை தெரிகிறது. சூர்யா உடனே யாரைக் கேட்டு இது மாதிரி முடிவு எடுக்குறீங்க என்று கோபப்பட சுந்தரவல்லி உடனே உனக்கு உண்மை தெரிஞ்சிருச்சு அவ்வளவு தானே என்று சொல்லுகிறார். நல்லது நடக்கணும்னு சிலர் வரல அவங்களோட குற்ற உணர்ச்சிக்காக வந்திருக்காங்க. என் லைஃப்ல இதுக்கு மேல நான் யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன். சாமிகிட்ட வந்து வேண்டினா சாமி தாலி கட்டுமா என்று கோபப்பட்டு பேசுகிறார் சூர்யா. நான் உடனே கிளம்புகிறேன் என்று கிளம்ப சூர்யாவின் அப்பா, உன்கிட்ட சொல்லாதது தப்பு தப்பா எல்லாம் உன்னோட நல்லதுக்கு தான் என்று சொல்ல சூர்யா ஏற்க மறுக்கிறார்.
நடந்ததற்கெல்லாம் நான் மன்னிப்பு கேட்டுக்குறேன். நீ எங்க கூட நிக்கல நானும் ஒரு ஓரமா நின்னு பூஜையில் கலந்து கொள் என்று மன்னிப்பு கேட்க உங்களுக்காக தான் டாடி என்று சூர்யா சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
மாதவி நந்தினியிடம் தேவையில்லாம அடுத்தவங்க விஷயத்துல ஏன் தலையிடுற உன்னோட தகுதிக்கு நீ அவங்க கிட்ட பேசியே இருக்கக் கூடாது என்று திட்டி விட்டு செல்கின்றனர். ரஞ்சிதா ஸ்கூலில் இருந்து வர காலை இழுத்துக் கொண்டு நடந்து வருகிறார் என்னாச்சு என்று அம்மாச்சி கேட்க முன்னு குத்தி விட்டதாக சொல்லுகிறார் ஏன் முள்ளு குத்தி கிட்ட பார்த்து நடக்க கூடாதா என்று கேட்க ஆமா நான் தான் உங்ககிட்ட போயி குத்துன்னு சொன்னேன் இல்ல ரோட்ல வரும்போது குத்திடுச்சு என் அம்மாச்சி இப்படி இருக்க என்று சொல்லுகிறார் சரி போயிட்டு சுண்ணாம்பு கொஞ்சம் வை என்று சொல்லிவிட்டு பச்சை பயிர் இருக்கு பாரு சாப்பிடு என்று அம்மாச்சி சொல்லுகிறார்.
பச்சைப்பயிறு சாப்பிட்டுக் கொண்டே வெளியே வந்த ரஞ்சிதாவிடம் அம்மாச்சி
வீட்டுப்பாடம் இருக்கா என்று கேட்க இல்லை என சொல்லுகிறார் நீ ஏதாவது வேலை வச்சிருப்பியே என்ன என்று கேட்க பெரிய வீட்டுல போயி பெருகிட்டு, துணி கலந்திருந்தா மடிச்சு மட்டும் வச்சிட்டு வந்துடு என்று அம்மாச்சி சொல்ல இப்பதான் ஸ்கூல்ல இருந்து வந்த அதுக்குள்ள வேலை வைக்கிற என்று சொல்லிக் கொண்டே செல்கிறார் ரஞ்சிதா.
பெரிய வீட்டிற்கு சென்ற ரஞ்சிதா வீடு பெருக்கிக் கொண்டிருக்கும் போது மாதவியின் பெட்டில் இருக்கும் நகைகளை போட்டுப் பார்க்கிறார். அந்த நேரம் பார்த்து அனைவரும் வந்து விட மாதவி இவரை பார்த்து விடுகிறார். இதனால் கடுப்பான மாதவி யாரு கேட்ட இதெல்லாம் எடுக்கிற எதுக்கு இங்க வந்த என்று ரஞ்சிதாவை திட்டுகிறார். வீட்டிலிருந்து ரஞ்சிதாவை வெளியே இழுத்து வந்த மாதவி முட்டி போட சொல்லி கை கட்ட சொல்லுகிறார்.
சுந்தரவல்லி வர அவரிடம் இவ நகை எல்லாம் போட்டு பார்த்திருக்கா அப்படின்னு சொல்ல அவர் கண்டுக்காம சென்று விடுகிறார். உடனே நந்தினி வர என்ன ஆச்சு என்று கேட்க நடந்ததை சொல்ல நீங்க ரஞ்சிதாவை விட்ருங்க நான் வேணா முட்டி போடறேன் என்று சொல்லி நந்தினி முட்டி போடுகிறார்.
உடனே சூர்யாவின் அப்பா வந்து என்னாச்சுமா இதுக்கு முட்டி போட்டுக்கிட்டு இருக்க என்று கேட்க குழந்தை தெரியாமல் நகை போட்டு பாத்திருக்கா அதுக்கு திருடிட்டானு சொல்லி பனிஷ்மென்ட் கொடுத்து இருக்காங்க என்று சொல்ல சூர்யாவின் அப்பா மாதவி மற்றும் சுரேகா இருவரையும் திட்டி வீட்டுக்குள்ளே அனுப்புகிறார்.
ரஞ்சிதா உடன் வீட்டுக்கு வந்த நந்தினி அவர் காலுக்கு ஒத்தடம் கொடுக்கிறார். அம்மாச்சி குழந்தை கால் எப்படி ரத்தம் கட்டி இருக்கு என்று வருத்தமாக பேசி மாதவியை திட்டுகிறார்.
அதற்கு நந்தினி இப்ப எதுக்கு அம்மாச்சி கத்துக்கிட்டு இருக்க அவங்களுக்கு நகையை போட்டு பார்த்தது தப்பு இல்ல நம்மள மாதிரி ஆளுங்க போட்டது தான் தப்பு. எப்பவுமே அவங்க போட்டுகிட்டே இருக்கணும் நம்ம பார்த்துக்கிட்டே இருக்கணும் என்று சொல்லுகிறார். இருந்தாலும் எனக்கு மனசே ஆறலாமா, நம்ம என்ன பண்ணும் நம்பலை இப்படி பேசுறாங்க என்று சிங்காரம் வருத்தப்படுகிறார்.
அந்த நேரம் பார்த்து சூர்யா வர என்ன ஆச்சு என்று கேட்க, நந்தினியின் தங்கை சொல்ல வருகிறார் ஆனால் நந்தினி சொல்லவிடாமல் தடுக்க அவரை தட்டி விட்டு நகையை போட்டு பார்த்ததற்கு முட்டி போட வச்சிருக்காங்க என்று கோபமாக சொல்லுகிறார். அதற்கு சூர்யா நான் தான் சொன்னேனே இந்த வீட்ல என்னையும் எங்க அப்பாவும் தவிர மீதி பேர் எல்லாமே அனிமல்ஸ்ன்னு அவங்களுக்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன் ரொம்ப சாரி என்று சொல்லுகிறார். உடனே சூர்யா கழுத்தில் இருந்த நகையை கழட்டி கொடுக்க நந்தினி வேண்டா சார் போட்டு பார்த்ததுக்கே முட்டி போட வச்சாங்க உங்களோட நக தெரிஞ்சா பிரச்சனையாகிடும் வேண்டாம் என்று மறுத்து விடுகிறார்.
சூர்யா மறுபடியும் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு சிங்காரத்திடம் கயிற்று கட்டிலை எடுத்துக்கொண்டு தோப்பில் போடுங்க நான் தனியா தூங்கணும் என்று சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.