
கார் ரேஸில் ஜெயிச்ச அஜித்.. ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக வாழ்த்து சொன்ன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!
கார் ரேஸில் ஜெயித்ததற்காக அஜித்திற்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படமும் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. தற்போது கார் ரேஸில் பிஸியாக இருந்து வரும் அஜித் அங்கு இருக்கும்போதே படத்திற்கான அப்டேட்டையும் கொடுத்திருந்தார்.
துபாயில் 24 மணி நேரமும் நடைபெற்ற கார் ரேஸில் 911 GT3 R என்ற பிரிவில் அஜித்தின் அணி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இதனை அஜித் தனது குழு உடன் கொண்டாடும் வீடியோவும் வெளியாகி இருந்தது.
இது மட்டும் இல்லாமல் பிரபலங்கள் பலரும் அவருக்கு சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதுவரை சிவகார்த்திகேயன், கமல்ஹாசன், யுவன் சங்கர் ராஜா, உதயநிதி ஸ்டாலின் என பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது ட்விட்டர் பக்கத்தில் congratulations my dear #Ajith Kumar.you made it. god bless you. love you.என்று குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Congratulations my dear #AjithKumar. You made it. God bless. Love you.#AKRacing
— Rajinikanth (@rajinikanth) January 13, 2025