Rajinikanth

Rajinikanth Statement : கமலுக்கு ஆதரவு இல்லை எனவும் பா.ஜ.க தேர்தல் அறிக்கை நன்றாக இருப்பதாகவும் ரஜினிகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தார். இருப்பினும் கமல்ஹாசன் தொடர்ந்து ரஜினி எனக்கு ஆதரவு கொடுப்பதாக கூறியதாக கூறி வந்தார்.

தளபதி 63 இப்படி தான் இருக்க போகுது – விஜயே வெளியிட்ட தகவல்.!

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் கமலுக்கும் எனக்கும் இடையேயான நட்பை கெடுத்து விடாதீர்கள். என்னுடைய முடிவில் மாற்றம் இல்லை என கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் பா.ஜ.க தேர்தல் அறிக்கையை பார்த்தேன். அதில் நதி நீர் இணைப்பு குறித்து அறிவிப்பு இருப்பது வரவேற்கத்தக்கது.

கல்யாணம்ல இல்ல.. ஆனால்? – ஓபனாக பேசிய ஸ்ருதி ஹாசன்.!

மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் முதலில் இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கூறியுள்ளார். இதனால் ரஜினிகாந்த் பாஜகவிற்கு மறைமுகமாக ஆதரவு அளிக்கிறாரோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.