ரஜினியின் ‘பாட்ஷா’ திரைப்படம் மீண்டும் ரீரிலீஸ்: ரசிகர்கள் உற்சாகம்..

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ திரைப்படம் அடுத்த மாதம் 14-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படம் ரூ.1000 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பாட்ஷா திரைபடம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதனை கொண்டாடும் வகையில், புதிய பொலிவுடன் ‘பாட்ஷா’ ரீ ரிலீஸ் ஆவுள்ளது. முன்னதாக, இப்படம் 2017 ஆம் ஆண்டு மறு வெளியீடு செய்யப்பட்டு பெரிய வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் பாட்ஷா திரைப்படம் 100 திரையரங்குகளுக்கு மேல் நாளை ரீரிலீசாகிறது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், பொதுவான ரசிகர்களுக்கும் ‘பாட்ஷா’ படம் மிகவும் பிடித்த படமாக கவர்ந்துள்ளது. டிவியில் மட்டும் இப்படம் நூற்றுக்கணக்கான முறை ஒளிபரப்பப்பட்டு உள்ளது.
படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆகியும் இப்படம் இன்றளவும் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வருகின்றது. மேலும் டிஆர்பி ரேட்டிங்கிலும் சாதனை படைத்து வருகின்றது. ரஜினிக்கு பிடித்த 3 படங்களில் பாட்ஷா திரைப்படமும் ஒன்று. இதனை ரஜினியே பலமுறை கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
