ரஜினி பற்றி கமல் பேசிய நிகழ்வு; வைரல்
தமிழ் சினிமாவில் இரு பெரும் ஆளுமைகள் சூப்பர் ஸ்டார் ரஜினி, விண்வெளி நாயகர் கமல்ஹாசன் என்பது தெரிந்ததே.
ரஜினிக்கும், கமலுக்கும் 70 வயதுக்கு மேலாகிவிட்டது. ஆயினும் மனதால் கலைத்துறையில் களைப்பில்லாமல் உழைப்பதும் அசாத்திய சாதனையே.
இந்த வயதிலும் இவர்கள் தொடர்ந்து நடித்து வருவதும், தேடலில் இருப்பதையும் கண்டு ரசிகர்களும், வளர்ந்து வரும் இளைய நடிகர்களும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.
இந்நிலையில், ரஜினிக்கு கூலி, ஜெயிலர்-2 படங்கள் நடைபெற்று வருகின்றது. கமலுக்கு, ‘தக் லைஃப்’ படத்தை தொடர்ந்து அன்பறிவு (சகோதரர்கள்) இயக்கத்தில் ஆக்ஷன் ஜானரில் அதிரடி படமொன்று உருவாக உள்ளது.
இச்சூழலில், ரஜினிகாந்த் குறித்து முன்னதாக கமல்ஹாசன் பேசிய நிகழ்வு தற்போது வைரலாகி வருகிறது. ‘ரஜினிகாந்த் திரையில் தோன்றினாலே ரசிகர்களை வென்றெடுக்க முடியும் என்று அவர் தாதா சாகேப் பால்கே விருது வென்றபோது கூறினேன். அப்படி எத்தனை பேரால் செய்ய முடியும்.
அவர் ஸ்க்ரீனில் வந்தாலே ரசிக்கிறார்கள் என்பது ஒருவிதமான பெர்சனாலிட்டி கல்ட்தானே. அவரை மாதிரி ஒரு ஆளே சினிமாவில் இல்லை. நான் கஷ்டப்பட்டு செய்வதெல்லாம், அவர் திரையில் வந்தாலே நடக்கிறது’ என பேசியுள்ளார். இவ்வாறு அன்று, ரஜினி பற்றி கமல் பேசிய பேச்சு, தற்போது இணையவெளியில் தெறிக்கிறது.