திருமணத்தின் மீது எனக்கு ஆசையில்லை: நடிகை சதா கொள்கை
ஒவ்வொருவரும் சதா சதா நினைப்பதெல்லாம், சம்பாத்தியம், திருமணம், வாழ்க்கை பற்றியது தானே. இதில், நடிகை சதா பற்றிய கூற்று பார்ப்போம்..
தமிழ் சினிமாவில், ‘ஜெயம்’ படத்தின் மூலமாக வசீகரித்தவர் நடிகை சதா. கோலிவுட்டை கடந்து மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் உலா வந்தார்.
தமிழில் வெளியான ‘உன்னாலே உன்னாலே’ படத்துக்கு பிறகு, அவருக்கான வாய்ப்புகள் குறைந்தது. பின்னர் மஜீத் இயக்கிய ‘டார்ச்லைட்’ படத்தில் விலைமாதுவாக நடித்து ஆச்சரியப்படுத்தினார்.
தற்போது சதா, போட்டோஷுட் எடுத்து வெளியிட்டு ரீ என்ரி கொடுக்க திட்டுமிட்டுள்ளார். 41 வயதாகும் சதா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
இது சதா தெரிவிக்கையில், திருமணத்தின் மீது எனக்கு ஆசையில்லை. புகைப்படத் துறையில் இன்னும் சாதிக்க வேண்டியுள்ளது. அதன்பிறகு, பார்க்கலாம். காலம் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளும். எதற்கு அவசரம்?’ என்கிறார்.
இந்நிலையில், வெளிநாடுகள் சென்று, அங்குள்ள அடர்ந்த வன பகுதிகளில் குழுவினருடன் சென்று, புகைப்படம் எடுத்தும் வெளியிட்டு வருகிறார். தனக்கேற்ற கதாபாத்திரங்கள் வராததால், வரும் சினிமா வாய்ப்புகளை நிராகரித்து வருவதாகவும் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.