Rajasthan Royals
Rajasthan Royals

Rajasthan Royals :

ஜெய்ப்பூரில் நேற்று இரவு நடந்த 40-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

ராஜஸ்தான் அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. டெல்லி அணியில் சந்தீப் லாமிச்சன்னே நீக்கப்பட்டு கிறிஸ் மோரிஸ் சேர்க்கப்பட்டார்.

‘டாஸ்’ ஜெயித்த டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானே, சஞ்சு சாம்சன் ஆகியோர் களம் இறங்கினார்கள்.

முதல் ஓவரின் 2-வது பந்திலேயே ரஹானே பவுண்டரி விளாசி ரன் கணக்கை தொடங்கினார்.

2-வது ஓவரின் முதல் பந்தில் சஞ்சு சாம்சன் (0) ரபடாவால் ‘ரன்-அவுட்’ செய்யப்பட்டு வெளியேறினார்.

இதனை அடுத்து கேப்டன் ஸ்டீவன் சுமித், ரஹானேவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் எதிரணி பந்து வீச்சை நாலாபுறமும் விரட்டியடித்து ரன் சேர்த்தனர்.

ரஹானே அடிக்கடி பவுண்டரி விளாசியதுடன், அவ்வப்போது சிக்சரும் தூக்கி ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா இமாலய வெற்றி!

பவர்பிளேயில் (முதல் 6 ஓவரில்) ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட்டுக்கு 52 ரன்கள் எடுத்து இருந்தது.

ரஹானே 32 பந்துகளில் அரை சதத்தை கடந்தார். 10.2 ஓவர்களில் அந்த அணி 100 ரன்னை எட்டியது.

31 பந்துகளில் அரை சதத்தை தொட்ட ஸ்டீவன் சுமித் (50 ரன்கள், 32 பந்துகளில் 8 பவுண்டரியுடன்) அடுத்த பந்திலேயே கிறிஸ் மோரிசிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அப்போது அணியின் ஸ்கோர் 13.1 ஓவர்களில் 135 ரன்னாக இருந்தது. 2-வது விக்கெட்டுக்கு ரஹானே-ஸ்டீவன் சுமித் இணை 130 ரன்கள் திரட்டியது.

அடுத்து களம் கண்ட பென் ஸ்டோக்ஸ் 8 ரன்னுடனும், ஆஷ்டன் டர்னர் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்து நடையை கட்டினார்கள்.

அதிரடியாக ஆடிய ரஹானே 17-வது ஓவரில் சதத்தை (58 பந்துகளில்) பூர்த்தி செய்தார். நடப்பு சீசனில் அடிக்கப்பட்ட 6-வது சதம் இதுவாகும்.

ஐ.பி.எல். போட்டியில் ரஹானே அடித்த 2-வது சதம் இது. 2012-ம் ஆண்டு போட்டியில் அவர் முதல் சதத்தை (பெங்களூரு அணிக்கு எதிராக ஆட்டம் இழக்காமல் 103 ரன்கள்) அடித்து இருந்தார்.

இரானி கோப்பை கிரிக்கெட்: விதர்பா அணி 425 ரன்கள் குவிப்பு கார்னிவர் சதம் அடித்தார்

இதனை அடுத்து வந்த ஸ்டூவர்ட் பின்னி (19 ரன்கள், 13 பந்துகளில் 2 பவுண்டரியுடன்), ரியான் பராக் (4 ரன்) ஆகியோர் கடைசி ஓவரில் ரபடா பந்து வீச்சில் போல்டு ஆனார்கள்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது.

ரஹானே 63 பந்துகளில் 11 பவுண்டரி, 3 சிக்சருடன் 105 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

டெல்லி அணி தரப்பில் ரபடா 2 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா, அக்‌ஷர் பட்டேல், கிறிஸ் மோரிஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

ரிஷாப் பான்ட் 36 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 78 ரன்னும், காலின் இங்ராம் 3 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

11-வது ஆட்டத்தில் ஆடிய டெல்லி அணி பெற்ற 7-வது வெற்றி இதுவாகும். ரஹானே அடித்த சதம் ராஜஸ்தான் அணிக்கு பலன் அளிக்காமல் வீணானது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.