India vs New Zealand
India vs New Zealand

India vs New Zealand – இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்கம் முதலே நியூ., அணி தடுமாற்றத்துடன் இருந்ததது. இருந்தும் அந்த அணியின் கேப்டன் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தார்.

இறுதியில் 38 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் இந்திய அணி வெற்றி பெற 158 ரன்கள் இலக்காக இருந்ததது.

இதனை தொடர்ந்து, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சர்மா மற்றும் தவான் விளையாடினர். ஆனால் இந்திய அணியினர் சூரிய ஒளியால் பந்து வீச்சை எதிர்கொள்ள சிரமப்பட்டனர்.

ஆகையால் ஆட்டம் அரை மணிநேரம் நிறுத்தப்பட்டது. இதனால் 49 ஓவர்கள் வரை பந்து வீச முடிவானது. வெற்றி இலக்கு 156 ஆக குறைத்து நிர்ணயிக்கப்பட்டது.

தொடக்க வீரர் ரோகித் 11ரன்கள் எடுத்து வெளியேறினார். ஆனால் தவான் 75 ரன்கள் எடுத்து இருந்தார்.

ரோகித் ஆட்டமிழந்த பின்னர் விளையாடிய கோலி 45 ரன்கள் எடுத்து வெளியேறினார். ராயுடு ரன்களுடன் ஆட்டமிழக்கவில்லை.

இந்த நிலையில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

மேலும் அடுத்து விளையாட இருக்கும் போட்டியில் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாட உள்ளது.