Irani Cup Cricket
Irani Cup Cricket

Irani Cup Cricket – இந்தியாவில் நடைபெற்று வரும் இரானி கோப்பை தற்போது விறு விறுப்பு அடைந்து உள்ளது.

இந்தியாவில் கிரிக்கெட் விளையாடிற்கு மிகவும் வரவேற்பு உண்டு.  அதே போல் விளையாட்டு வீரர்களும் தங்களில் முழு கவனத்தையும் செலுத்தி விளையாடுகின்றனர்.

இந்த நிலையில் நாக்பூரில் நடைபெறும் இரானி கோப்பை போட்டுயில் நமது வீரர்கள் தங்களை நிருபித்து வருகின்றனர்.

‘ரெஸ்ட் ஆப் இந்தியா’ அணிக்கு எதிரான இரானி கோப்பை போட்டியில் விதர்பா அணியின் கர்னேவர் சதம் அடிக்க முதல் இன்னிங்சில் 95 ரன்கள் முன்னிலை பெற்றது.

‘ரெஸ்ட் ஆப் இந்தியா’, நடப்பு ரஞ்சி கோப்பை சாம்பியன் விதர்பா அணிகள் மோதும் இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடக்கிறது. ரெஸ்ட் ஆப் இந்தியா முதல் இன்னிங்சில் 330 ரன்கள் எடுத்தது.

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் முதல் இன்னிங்சில் விதர்பா அணி 6 விக்கெட்டுக்கு 245 ரன்கள் எடுத்திருந்தது. அக்சய் வாத்கர் (50), அக்சய் கர்னேவர் (15) அவுட்டாகாமல் இருந்தனர்.

மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. ராகுல் சகார் ‘சுழலில்’ அக்சய் வாத்கர் (73) ஆட்டமிழந்தார்.

அபாரமாக விளையாடிய கர்னேவர் (102) சதம் கடக்க, விதர்பா அணி முன்னிலை பெற்றது. வாக்கரே (20) நிலைக்கவில்லை.  மற்றவர்கள் சரியாக விளையாடமல் வெளியேறினார்கள்.

விதர்பா அணி முதல் இன்னிங்சில் 425 ரன்கள் எடுத்து, 95 ரன்கள் முன்னிலை பெற்றது. ரெஸ்ட் ஆப் இந்தியா சார்பில் அதிகபட்சமாக தீபக் சகார் 4 விக்கெட் வீழ்த்தினார்.

அடுத்து இரண்டாவது இன்னிங்சை துவக்கிய ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு மயங்க் அகர்வால் (27), அன்மோல்பிரீத் சிங் (6) ஜொலிக்கவில்லை.

மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில், ரெஸ்ட் ஆப் இந்தியா அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 102 ரன்கள் எடுத்து 7 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

ஹனுமா விஹாரி (40), கேப்டன் ரகானே (25) அவுட்டாகாமல் இருந்தனர்.