11,500 ஸ்கிரீன்களில் இதோ சோலோவாக வருகிறான் கங்குவன்: தயாரிப்பாளர் மகிழ்ச்சித் தகவல்
சோலோவாக கங்குவா திரைப்படம் களத்தில் இறங்குவதால், உலக அளவில் 11,500 ஸ்கிரீன்களில் ரிலீஸ் ஆகிறது என தயாரிப்பாளர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். படம் குறித்து, அவர் வெளியிட்டுள்ள அப்டேட் வருமாறு:
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து உருவாகியுள்ள கங்குவா படம் இம்மாதம் 14-ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரலாற்று கதைக்களத்தை மையமாக வைத்து திரைக்கதையை சிவா உருவாக்கியுள்ளார். படத்தில் இருவேறு கெட்டப்புகளில் சூர்யா நடித்துள்ள நிலையில்,
தற்போதைய காலகட்டத்தில் வாழும் இளைஞர் பிரான்சிசாக ஒரு கேரக்டரிலும்..,1500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கங்குவன் என்ற கேரக்டரிலும் சூர்யா புதிய பரிமாணம் எடுத்துள்ளார்.
இந்த இரு கேரக்டர்களில் கங்குவன் கேரக்டர் படத்தில் அதிகமாக இடம்பெற்றுள்ளதாகவும் ஏறக்குறைய 2 மணி நேரங்கள் இந்த கேரக்டர் படத்தில் இருக்கும் என்றும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் சூர்யா, இயக்குனர் சிவா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உள்ளிட்டவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாகாமல் ரிலீஸ் தேதி தள்ளி போனதால், மிகப்பெரிய நன்மை கிடைத்துள்ளதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.
தீபாவளியை ஒட்டி கங்குவா படம் ரிலீஸ் ஆகியிருந்தால் 4000 முதல் 5000 ஸ்கிரீன்கள் மட்டுமே கிடைத்திருக்கும். தற்போது சோலோவாக இந்த படம் ரிலீசாகவுள்ளதால், உலக அளவில் 11,500 ஸ்கிரீன்களில் படம் ரிலீசாக உள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
எந்த விஷயத்திலும் அதில் இருக்கும் பாசிட்டிவ்வை எடுத்துக் கொள்ளும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் இந்த அணுகுமுறை அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
இந்தப் படம் உலக அளவில் அளவில், அதிகமான வசூலை எட்டும் என்றும் அவர் தொடர்ந்து நம்பிக்கை தெரிவித்து வருகிறார்.
குறிப்பாக, 1000 கோடிக்கு மேல் கலெக்ஷன் ஆகும் எனவும் எதிர்பார்க்கின்றனர். கலக்கட்டும் கங்குவா.!