46 வயதாகியும் பிரபாஸ் திருமணம் செய்யாதது ஏன்?: பெற்ற தாய் சொல்லும் காரணம்..
46 வயதாகியும் நடிகர் பிரபாஸ், மேரேஜ் பண்ணாமல் இருப்பதற்கு காரணம் குறித்து, அவரது தாய் சொல்வதை கேட்போமா..
ராஜமௌலி இயக்கிய ‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்கள் மூலமாக பிரபாஸ் இந்தியா முழுவதும் புகழ் பெற்றார்.
பிறகு, பான் இந்தியா ஸ்டாராக வலம் வந்த அவர், கடைசியாக ‘கல்கி’ படத்தில் நடித்தார். இந்தப் படத்துக்கு முன்னதாக வெளியான சலார், ஆதிபுருஷ் ஆகிய இரண்டு படங்களும் தோல்வி அடைந்ததால், இந்தப் படத்தையும் தோல்வியாக கொடுத்து ஹாட்ரிக் தோல்வியை பெற்றுவிடக்கூடாது என்பதில் தீர்க்கமாக இருந்தார் பிரபாஸ். படமும் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவானது.
மேலும் கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி என பான் இந்தியா ஸ்டார்களையும் இந்தப் படத்தில் கமிட் செய்தார்கள் படக்குழுவினர். ஆனால், எதிர்பார்த்தபடி படத்துக்கு ரிசல்ட் கிடைக்கவில்லை. அதிகம் நெகட்டிவ் விமர்சனங்களே கிடைத்தன.
அடுத்ததாக அவரது நடிப்பில் வரவிருக்கும் ‘கண்ணப்பா’ படமாவது பிரபாஸை மகிழ்விக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இதற்கிடையே பிரபாஸுக்கு 46 வயதாகிறது. ஆனால், அவர் இன்னமும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இச்சூழலில் நடிகை அனுஷ்காவும், பிரபாஸும் ‘பாகுபலி’ படத்தில் நடித்தபோது இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. ஆனால், அது பாதியில் முடிந்துவிட்டது. இதன் காரணமாகத்தான் அவர்கள் இருவருமே இன்னமும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்கள் என்றெல்லாம் தகவல்கள் பரவிக் கொண்டிருந்தன.
இந்நிலையில், பிரபாஸின் தாய் கூறுகையில், ‘எனது மகன் பிரபாஸுக்கு ரவி என்கிற நண்பர் இருக்கிறார். ரவியின் திருமண வாழ்க்கை நன்றாக அமையவில்லை. அந்தத் திருமண வாழ்க்கை ரொம்பவே போராட்டம் நிறைந்ததாக இருந்தது. அதை அவரும் சகித்துக்கொண்டார். இருந்தாலும் அந்தத் திருமண வாழ்க்கை கடைசியில் கசப்பான முடிவுக்கு வந்துவிட்டது.
எனவே, திருமண வாழ்க்கை என்றாலே, இப்படித்தான் விரைவில் பாதியில் முடிந்துவிடும் என்கிற எண்ணம் பிரபாஸின் மனதில் ஆழமாக ஊன்றிவிட்டது. இதனால்தான் அவர் திருமணத்தில் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை” என்றார்.
ஒரு தாய் சொல்லும் காரணம் அருமை; நல்ல காரணம். இதுபோல, அனுஷ்காவுக்கும் ஏதாவது காரணம் இருக்கும். சொல்வாரா.?