அண்ணா யுனிவர்சிட்டி மாணவி பலாத்கார விவகாரம் குறித்து, சிவகார்த்திகேயன்…
மாணவி பலாத்கார விவகாரம் குறித்து, சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ள தகவல் காண்போம்..
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது தெரிந்ததே. இதனை தொடர்ந்து, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும், சிவகார்த்திகேயன், சுதா கொங்கரா இயக்கத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் ஜெயம் ரவி, அதர்வா உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர். படத்திற்கு, 1965 என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் தற்போது திருச்செந்தூரில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம் செய்துள்ளார். மேலும் முருகனின் அறுபடை வீடுகளுக்கும் செல்ல, தான் விருப்பத்துடன் உள்ளதாகவும் அடுத்தடுத்து செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், ஒவ்வொரு முறை திருச்செந்தூர் வரும்போதெல்லாம் பாசிட்டிவ்வாக உணர்கிறேன். அமரன் படத்தின் வெற்றிக்கு நன்றி சொல்லவே இங்கு வந்துள்ளேன்’ என்றார்.
இதனிடையே அண்ணா யுனிவர்சிட்டி விவகாரம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ‘கோயிலில் தான் பதிலளிக்க விரும்பவில்லை’ என கூறினார்.
பின்னர், ‘இதுபோன்ற விஷயங்கள் நடக்கக்கூடாது என்பதுதான் அனைவரின் விருப்பமாக உள்ளது. இந்த விவகாரத்தில் காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கம் தான், அனைவரும் இருக்க வேண்டும். அதே சமயம், பாதிக்கப்பட்டவர்களுக்கும் முழு தைரியம் இருக்க வேண்டும். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது என்று நம்புவோம். கடவுளிடமும் தான் அதையே வேண்டிக் கொள்கிறேன்’ என்றார்.